ஆணைக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த போராளி!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Friday, August 19, 2016

ஆணைக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த போராளி!!!

அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களை நோக்குடன் கொண்டு தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை . என இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (17.08.2016) நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும் போதே முன்னாள் போராளி ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் போராளிகள் 107 நபர்கள் மரணித்துள்ளனர். விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக பல கருத்துக்கள் வருகின்றன. நாங்கள் தடுப்பு முகாங்களில் இருந்த சமயத்தில் எமக்கு உணவுகள் வழங்கப்பட்டது, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட உணவுகளை, தடுப்பூசிகளை பரீட்சித்து பார்த்து சாப்பிடும் நிலையில் அன்று நாங்கள் இருக்கவில்லை.
அதனால் அதன் உண்மைத்தன்மை முன்னாள் போராளிகளுக்கு தெரியவில்லை . தற்போது நாங்கள் உள்ள நிலையில் அனைவரும் மன அளவில் பாதிப்படைந்துள்ளோம். 95 வீதம் முன்னாள் போராளிகள் தமக்கு என்ன நடந்திருக்கும் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகள் நாங்கள் தமிழர்களுக்காக இருக்கின்றோம், விடுதலைக்காக இருக்கின்றோம். எமக்கு தீர்வுத்திட்டம் வேண்டுமேன பேசும் அவர்கள் முன்னாள் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரும் கதைப்பதில்லை.
முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். ஆனால் சமூகத்துடன் இணைப்பட்ட எந்த அத்தாட்சியும் வெளிப்படவில்லை முன்னாள் போராளி என்பதால் எனது உறவினர்கள் கூட என்னுடன் கதைப்பதில்லை அந்த அளவிற்கு எம்மை இந்த சமூகம் பின்தள்ளியுள்ளது.
நாங்கள் போராடியது எமது தமிழ் பேசும் மக்களுக்காக இன்று தமிழ் மக்கள் இந்த நிலையில் இருப்பதுக்கு காரணம் எமது போராட்டம் இந்த அளவிற்கு வலுப்பெற்றது. நங்கள் போராடாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாகியிருக்கும்.
நாங்கள் போராடியது தமிழ் மக்களுக்காக, போராடிய முன்னாள் போராளிகள் மாவீரர்கள் அவர்கள் ஒன்றும் அறியதாவர்கள் எங்களுக்கு தனிநாடு எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம், தமிழர் தனித்துவமாக நிம்மதியாக வாழ ஒரு வழி வேண்டுமேன்று போராடி மரணித்தவர்கள். அவர்களை நாங்கள் நினைவு கூறுவதற்கு கூட தற்போது எதுவும் இல்லை.
என்னுடன் ஒன்றாக பயிற்சி எடுத்த 140 போராளிகளில் நாங்கள் 4 பேர் தற்போது உயிருடன் இருக்கின்றோம்.136 பேர் மரணித்துள்ளனர். அவர்களை நாங்கள் நினைவு கூறு முடியாதா? அவ்வாறு நினைவு கூறுவது தவறா? யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களுக்கு வடக்கில் நினைவுத் தூபிகள் தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளுக்கு தூபிகள் எங்கே என்றும் கேள்வி எழுப்பினார்?
உண்மையிலேயே விஷ ஊசி ஏற்றப்படாவிட்டாலும் மனதளவில் முன்னாள் போராளிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண ஒரு நோய் ஏற்ப்பட்டால் கூட ஊசி ஏற்றப்பட்டதால் வந்த நோயாக இருக்குமோ என்ற பயம் அனைத்து முன்னாள் போராளிகளிடமும் தற்போது காணப்படுகின்றது.
முன்னாள் போராளியான நாங்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றால் கூட புலனாய்வு பிரிவினர் எம்மை பின்தொடர்கின்றனர். அப்படியிருந்தும் எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை ஆணைக்குழு முன் எனது கருத்துக்களை கூற வேண்டும் என வந்துள்ளேன் என தெரிவித்தார்.

                     
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)