அதிகரித்துள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த யாழ்.குடாநாட்டில் துரித பொலிஸ் படையணியை உடன் உருவாக்க வேண்டும்- நீதிபதி இளஞ்செழியன் - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Monday, August 22, 2016

அதிகரித்துள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த யாழ்.குடாநாட்டில் துரித பொலிஸ் படையணியை உடன் உருவாக்க வேண்டும்- நீதிபதி இளஞ்செழியன்


யாழ்.குடாநாட்டில் திடீரென மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லூர் திரு விழாக்காலத்தை முன்னிட்டு, துரித செயற்பாட்டு பொலிஸ் படையணியை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டுக்கான பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலை மையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் இந்த அறி வுறு த்தல் கடந்த வெள்ளியன்று வழங்கப்பட்டுள்ளது. 

யாழ்.குடாநாட்டில் திடீரென வாள்வெட்டு அதன் காரணமாக கொலை, கொலை முயற்சி, வெட்டுக்காயங்கள் ஒரு கிழமையில் சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நிலைமையை வளரவிடக் கூடாது. 

இம்மாதம் 29, 30, 31 ஆகிய 3 தினங்கள் நல்லூர் ஆலயத்தின் முக்கிய உற்சவங்கள் இடம்பெறவுள்ளன. புலம்பெயர் தமிழர்கள் உட்பட, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த விழாக்களில் கலந்து கொள்ள வரு வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
இதனால் சட்டம் ஒழுங்கை சீராக மேற்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எது விதமான குற்றச் செயல்களும் இடம்பெறாவண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். 

குற்றச்செயல்கள் நடை பெற்றால் உடனடியாக அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அதிவேக நடவடிக்கை எடுப்பதற்காக உடனடியாக யாழ். பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் அல்லது யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கட்டுப்பாட்டில் துரித செயற்பாட்டு பொலிஸ் படையணி ஒன்றை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டும். 

குற்றச் செயல்கள் இடம் பெறுகின்ற இடத்திற்குத் துரிதமாக பொலிஸார் பறக்கும் படையணியாக விரைந்து சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த நடவடிக்கை அவசியமாகியிருக்கின் றது.

குற்றச் செயல்களில் சம்ப ந்தப்பட்டவர்களை உடனடி யாகக் கைது செய்தல், குற்றச் செயல்கள் இடம்பெறாவண்ணம் தடுத்தல், குற்றம் புரிபவர்களிடமிருந்து பொதுமக் களைப் பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளில் இந்தப் படையணி விரைந்து செயற்பட முடியும். ஆகவே, இத்தகைய பறக்கும் படையணியாக யாழ்.குடாநாட்டு பொலிஸார் செயற்படுவதற்கு இந்த நடைமுறையைக் கைக்கொள்ள வேண்டும். 

விரைவுச் செயற்பாட்டு பொலிஸ் படையணியானது, யாழ்.குடாநாட்டின் எந்த பொலிஸ் நிலைய  பிரதேச மாக இருந்தாலும் பிரதி பொலிஸ்மா அதிபர் அல்லது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலில் அங்கு பறக்கும் படையாகச் செயற்பட வேண்டும் என அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.                
 நன்றி:
(இ-7) valampurri.lk    

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)