தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் தன்னை அர்ப்பணித்த (செல்வராஜா)!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Sunday, September 18, 2016

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் தன்னை அர்ப்பணித்த (செல்வராஜா)!!!


தமிழ் மக்களின் விடுதலை என்கின்ற நீண்ட பயணத்தில் இணைந்தவர் பலர். பாதி தூரம் வரை வந்து இடையில் தங்கியோர் பலர், தரிப்பிடம் பாராது கடந்து வந்தவர்கள் கூட 2009 இற்குப் பின் இனி செய்வதற்கு எதுவுமே இல்லை என்று பயணத்தை  முடித்தவர்  இன்னும்  பலர்,ஓயாத  அலைகளாய்   இருதயத் துடிப்பு இருக்கும் வரை தன்னால் முடிந்த வரை விடுதலைப் பாதையை வரித்துக் கொண்டோருக்கு உதவ வேண்டும் என்று தொடர்ந்து ஊக்கம் கொடுத்தவர் மிகச் சிலர்.

அந்த சிலருள் செல்வா அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் செல்வராஜா அவர்கள் குறிப்பிடத் தக்கவர். சமயம், சமூகம், மொழி, நாடு என்று பன்முகப்பட்ட திசைகளில் அவரது பயணம் தொடர்ந்ததை பலர் அறிவார்கள். தான் உருவாக்கிய ஆலயத்தினை சமய பணிகளுக்கு மட்டுமல்லாது கலை, பண்பாடு மற்றும் சமூகப் பணிகளை மேற்கொள்ளவதற்காக தன்னைத் தேடி வந்தவர்களுக்கு வழங்கினார்.

தான் உருவாக்கிய சமய, சமூக நிறுவனங்களில் விடுதலை அரசியல் இடம் பெறலாகாது என்ற கொள்கையில் அவர் உடன்பாடு கொண்டவர் அல்ல. தான் வாழ்ந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கமைய அரசியல், சமய, சமூக, கலாச்சார பணிகளை பல்வேறு அமைப்புகள்  மற்றும்  தனி  நபர்கள்  கேட்ட போதெல்லாம் இல்லையெனாது உதவிகள் பல செய்தவர். தானும் வாழ்ந்து தன் சமூகமும் வாழ தன்னாலியன்ற முயற்சிகளைச் செய்தார்.


தாயகத்தில் 2008 மற்றும் 2009 காலப் பகுதியில் எம் மக்கள் கருவறுக்கப்பட்டபோது பிரித்தானியத் தமிழர் பேரவை எடுத்த பல முயற்சிகளை ஊடகங்கள் வாயிலாக தமிழ் மக்களுக்கு உணர்வுபூர்வமாக எடுத்துச் சென்றவர் செல்வா அண்ணா. நேர காலம் பாராது எந்த நேரம் அழைத்தாலும் ஓடோடி வந்து உதவியவர் அவர். பிரித்தானிய தமிழர் பேரவையின் தேசிய அவையின் (National Assemblyமுக்கிய அங்கத்தவராக செயல்பட்டதுடன் நாம் எடுத்த பாரிய செயல் திட்டங்களில் முன் நின்று பங்களித்தவர். "நாங்கள் இருக்கிறோம், எடுத்த கருமத்தை நடத்தி வெற்றியோடு முடியுங்கள்" என்று எப்போதும் எம்மைத் தட்டிக் கொடுத்தவர் இன்று எம்முடன் இல்லை.  எனினும் அவரது ஆசிகள் எம்மை தொடர்ந்து எம் விடுதலைப் பாதையில் பயணிக்க உந்தும் என்பது உறுதி.
 


ஆன்மீகவாதியாகவும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலையில் உறுதியான நம்பிக்கையையும் கொண்டிருந்த இவரை விடுதலை இறையியல்வாதியாகவே நாம் நினைவு கூருகின்றோம்.

இவரது இழப்பினால் துயருறும் இவரது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் நாமும் இணைகின்றோம்.
TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)