ஆறு குளம் ஏரி குட்டைகளுக்கு தான் அமைச்சர்' என்று டெனிஸ்வரன் விசமப் பேச்சு!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Monday, September 26, 2016

ஆறு குளம் ஏரி குட்டைகளுக்கு தான் அமைச்சர்' என்று டெனிஸ்வரன் விசமப் பேச்சு!!!இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளினால் வலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், கடும் காற்றில் சிக்கி படகும் சேதமடைந்துள்ள நிலையில் தொழில் செய்ய வலைகள் வழங்கி உதவுமாறு கேட்டு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரனை தான் சந்திக்கச் சென்ற போது...

டெனிஸ்வரனுக்கு கன்னத்தில் அறைந்த அண்ணாமலை (Video)

'தனக்காக இரண்டு நிமிடங்கள் கூட ஒதுக்கி பேசாத அவர், தற்போது ஏசி அறைக்குள் இருந்துகொண்டு 20 நிமிட வீடியோ எடுத்து' வெளியிட்டுள்ளதாகவும்,
அந்த வீடியோவில் 'தான் கடலுக்கு அமைச்சர் இல்லை ஆறு குளம் ஏரி குட்டைகளுக்கு தான் அமைச்சர்' என்று டெனிஸ்வரன் விசமப் பேச்சு பேசியுள்ளதாகவும், 
கடுமையாக சாடியுள்ள வடமராட்சி கிழக்கு வத்திராயன் வடக்கைச் சேர்ந்த மூத்த கடலோடியான காத்தலிங்கம் அண்ணாமலை. 
மீன்பிடி வலை  உதவி கேட்டுச்சென்ற தன்னிடம் மாவீரரான தனது மகனின் மரணத்தை நீரியல் வளத்திணைக்களத்திடம் உறுதிப்படுத்தி வந்தால் 50,000 ரூபாய் பணம் தருவதாக குளத்து அமைச்சர் டெனிஸ்வரன் கூறியதும், 
போராளி மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக குளத்து அமைச்சர் டெனிஸ்வரன் ஊடகங்களில் கூவி கூவி விற்பதும், 
உயிர்த்தியாகங்களை கொச்சைப்படுத்தும் - பேரம் பேசும் டெனிஸ்வரனின் அருவருப்பான விளம்பரம் என்றும் அறச்சீற்றம் காட்டினார்.
தற்போதுள்ள அரசியல்வாதிகளின் குடும்பத்தில், ஒரு பிள்ளையாவது போரில் பங்குபற்றி இறந்திருந்தால் அல்லது கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டிருந்தால் அல்லது உடல் உறுப்புகளை இழந்திருந்தால் அந்த குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் பணம் உழைத்துக் கொடுக்க தான் தயாராகவிருப்பதாகவும் காத்தலிங்கம் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
2009 க்கு முன்னர் சட்டத்தரணியாக பணியாற்றிய டெனிஸ்வரன் எத்தனை போராளிகளின் வழக்குகளில் ஆஜராகி உள்ளார் என்று கூறுவாரா? என்றும் காத்தலிங்கம் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 
குளத்து அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களே!


போரில் சிக்கி சின்னாபின்னமான ஒரு தேசத்தின் அமைச்சர் என்பதனை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 
தேசத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் துரிதமாக கட்டி எழுப்ப வேண்டிய ஒரு இடத்தில் நின்று கொண்டு போர்க்கால அடிப்படையில் பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றீர்கள் என்பதனை மறந்து விட்டு... 
'நான் கடலுக்கு அமைச்சர் இல்லை ஆறு குளம் ஏரி குட்டைகளுக்கு தான் அமைச்சர்' என்று, சொகுசு கார்களுக்குள்ளும் - ஏசி அறைகளுக்குள்ளும் இருந்து  கொண்டு, விசர்ப்பேச்சு பேசுவதை உடன் நிறுத்துங்கள்.
காத்தலிங்கம் அண்ணாமலையுடன் தொடர்பு கொள்வதற்கு அழையுங்கள்
: 0094 77 4018 374
தொடர்புடைய செய்தி:

சேதி:Yathumaki
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)