Header Ads

ஏன் இப்படி சம்பந்தனுக்கு குனிந்து கொடுக்கின்றார் என்று வடமராட்சி மக்கள் அறிய ஆர்வமாக உள்ளனர்.

சம்பந்தனுக்காக வேட்டி கழட்டி அம்மணமாய் நின்ற சுகிர்தன் (Video)

அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் இனத்தின் விடுதலை வேட்கையாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் 24.09.2016 சனிக்கிழமை அன்று, குமுறி முகடுடைத்துக் கொப்பளித்த ‘எழுக தமிழ்’ எழுச்சிப்பேரணியில் கலந்துகொள்ளாமல், தானும் தான் வால் பிடித்து தொங்கும் இலங்கை தமிழரசுக்கட்சியும் மூக்குடைபட்ட பின்னர்,
தமது தவறுகளையும் - பித்தலாட்டங்களையும் நியாயப்படுத்துவதற்கு ஒரு மேடை நிகழ்ச்சியாக, தியாக தீபம் திலீபன் அவர்களின் 29ம் ஆண்டு நினைவுநாள் நினைவேந்தலை வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் பயன்படுத்த  முற்பட்டுள்ளார். இந்த வீணர்கள் வித்தை கடுமையான கண்டனத்துக்குரியது. 

ஏழாண்டுகளில் சம்பந்தன் சாதித்தது என்ன?
‘தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை தந்தால்’ அரசாங்கத்தை சர்வதேச சமுகத்தின் கிடுக்குப்பிடியிலிருந்து பிணை எடுத்து விடுவதாக டீல் பேசி, ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரிலிருந்து அரசை பிணை எடுத்து விட்டவர் இந்த சம்பந்தன்.
இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரச படைகளால் இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கும் - இனப்படுகொலைக்கும் உலக தமிழர்கள் ‘சர்வதேச விசாரணையை’ கோரி நின்றபோது அதனை ‘உள்ளக விசாரணையாக’ மாற்றியவர் இந்த சம்பந்தன்.

பாவப்பட்ட தமிழ் இனத்தின் அவமானச் சின்னமாக திகழும் சம்பந்தன்
இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு எவ்வித பங்களிப்பும் இல்லை என்றும், தன்னை விடுதலைப்புலிகள் இயக்கம் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் அமர்த்தவில்லை என்றும், தன்னை கொலை செய்வதற்கு விடுதலைப்புலிகள் அழைந்து திரிந்தனர் என்றும், விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் என்றும், அபாண்டமாக சுத்தப் பொய்யை மறுபடியும் மறுபடியும் சம்பந்தன் கூறிக்கொண்டிருப்பது தான்.
இன்றைய காலச்சூழலில் கோவணத்தோடு நிற்கும் தமிழ் மக்களுக்கு உருப்படியாக உடுக்க ஆடை ஏதும் கொடுக்காமல், அந்த கோவணத்தையும் உருவிப்போட்டு விட்டு அம்மணமாக நிற்கச்சொல்லும் சரணாகதி அரசியலையே சம்பந்தன் முன்னெடுத்து வருகின்றார்.

திலீபனின் தியாகத்தை பேசாமல் ‘சம்பந்தனின் புராணம்’ பாடிய சுகிர்தன்
நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் 26.09.2016 திங்கள் கிழமை அன்று அனுட்டிக்கப்பட்ட நினைவேந்தல் நாளில் சும்மா ஒப்புக்கு கலந்துகொண்ட சுகிர்தன்,
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நாளில் அந்த மாவீரனின் மகோன்னதமான தியாகத்தைப்பற்றி, உலக வரலாற்றில் திலீபனின் அத்தியாயங்களைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட கூறாமல்,
தமிழ் இனத்தின் வெட்கம், கேடு, அவமானம், சாபமாய்ப்போன சம்பந்தன் புராணத்தை முக்கி முக்கிப் பாடுவது ஏன்? 
சூடு சொரணை கொஞ்சமும் இல்லாமல் சுகிர்தன் ஏன் இப்படி சம்பந்தனுக்கு குனிந்து கொடுக்கின்றார் என்று வடமராட்சி மக்கள் அறிய ஆர்வமாக உள்ளனர். 
காரணம் என்ன? இங்கு இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் ஆதாரம் உள்ளது.

https://www.youtube.com/watch?v=0sKkhcI3HIE
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.