Headlines News:
Home » » சிறீதரனுக்குள் ஏற்பட்டுள்ள ஈகோ மனநோய், தீயாக குமுறி கிளிநொச்சி பொதுச்சந்தையை எரித்தழித்து விட்டது (Video)

சிறீதரனுக்குள் ஏற்பட்டுள்ள ஈகோ மனநோய், தீயாக குமுறி கிளிநொச்சி பொதுச்சந்தையை எரித்தழித்து விட்டது (Video)

Editor By Yazhpanam on திங்கள், 19 செப்டம்பர், 2016 | பிற்பகல் 3:15:00

கிளிநொச்சி பொதுச்சந்தை தீப்பற்றி எரிந்தழிந்து விட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிறிய வர்த்தகர்கள். கடனாளிகள். போரின் பாதிப்பிலிருந்தும் கடனிலிருந்தும் மீள முடியாத அடிமட்ட நிலையில் இருந்த இந்தச் சிறுவர்த்தகர்களை இப்போது தீ எரித்துவிட்டது.

இந்த அனர்த்தத்துக்கு பொறுப்பாளிகள் வட்டக்கச்சி குறுநில மன்னர் சிறீதரனும், அவரது எடுபிடிகளான கிளி.கரைச்சி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் குகராசா மற்றும் உதவி தவிசாளர் நகுலன் ஆகியோரே இந்தச் சந்தை கட்டப்படுவதற்கு தடையாக இருந்தவர்களே. 
கிளிநொச்சிப் பொதுச்சந்தை இரண்டு கட்டத்தில் நிர்மாணிக்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டது. முதலாவது கட்டத்தில் மீன் சந்தையும் மரக்கறிச்சந்தையும். இரண்டாவது கட்டத்தில் நவீன சந்தை. இரண்டும் இணைந்த பொதுச்சந்தையென்பதே முழுமையான வடிவம். இதில் முதலாம் கட்டமாக மீன்சந்தையும் மரக்கறிச்சந்தையும் கட்டப்பட்டு, அவை இயங்கி வருகின்றன. 
இரண்டாம் கட்டமான நவீன சந்தையை 210 மில்லியன் ரூபாவில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான ஆயத்த வேலைகளும் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தன. சந்தைக்கான மாதிரி உருவப்படமும் ஏ9 சாலை ஓரமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
போரால் மிகவும் மோசமாக உருக்குலைந்து போயிருந்த கிளிநொச்சியை துரிதகதியில் புனருத்தாரணம் செய்து உள்ளுர் உற்பத்திகள், வேலைவாய்ப்புகள், சந்தை வாய்ப்புகள் உட்பட நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தன்னிறைவு பொருளாதார அபிவிருத்தியில் தக்கவைக்க தன்னிடம் அன்று இருந்த அரசியல் அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி கடுமையாக உழைத்திருந்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்.
சிறீதரனுக்குள் ஏற்பட்டுள்ள ஈகோ மனநோய்! தீயாக குமுறி கிளிநொச்சி பொதுச்சந்தையை எரிந்தழிந்து விட்டது. 
இந்த கொடிய நோய் காரணமாக சிறீதரன், தனது எடுபிடிகள் கைப்பற்றியிருந்த கிளி. கரைச்சி பிரதேசசபையை வைத்து  இரண்டாம் கட்டமான நவீன சந்தையை 210 மில்லியன் ரூபாவில் நிர்மாணிப்பதற்கு உரிய ஒத்துழைப்பை வழங்காமல் குடுமிப்பிடி சண்டையை நிகழ்த்தி குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருந்தார். 
அவரது அதிகார இழுபறியும், அள்ளக்கைகளான பிரதேசசபையின் அலட்சியமும் - வினைத்திறனற்ற தன்மையும், மக்கள் நலன் அற்ற சிந்தனையும் சந்தையின் நிர்மாணப்பணிகளை இல்லாமற் செய்து விட்டது. 
இதனால், சிறுவர்த்தகர்கள் தற்காலிகக் கொட்டகைகளிலேயே தங்கள் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். இந்தத் தற்காலிகக் கடைகள் பாதுகாப்பற்றவை. இதை மாற்றியமைத்துத் தருமாறு அவர்கள் வடக்கு மாகாணசபையிடமும், பிரதேச சபையிடமும், பாராளுமன்ற உறுப்பினர்களிடத்திலும், ஆளுநரிடத்திலும், அரசாங்கத்திடத்திலும் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டேயிருந்தனர்.தேர்தல் காலங்களில் தங்களிடம் வாக்குப்பிச்சை இரந்து வந்தவர்களிடம் இந்த சிறு வர்த்தகர்களின் பிரதான கோரிக்கை இதுவாகவே இருந்தது.
அதிகாரம் செலுத்துவதற்கும் - அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கும் அவரவர் முண்டியடித்துக் கொண்டிருந்தனரே தவிர, தீர்வைக் காண்பதற்கு எவரும் முன்வரவில்லை.
இந்த நிலையிலேயே கடந்த 16.09.2016 வெள்ளிக்கிழமை இரவு சந்தை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், எரிகிற வீட்டில் எடுப்பது லாபம் என்றமாதிரி, இந்த அழிவின் மத்தியிலும் அவரவர் அரசியல் செய்த காட்சிகளே!
இந்தப் பேரழிவு நடைபெறாத வகையில் நிரந்தரக்கட்டிடத்தை அமைத்திருந்தால் பாதுகாப்புக் கிடைத்திருக்கும். நட்டமும் அவலமும் ஏற்பட்டிருக்காது. 
வட்டக்கச்சி குறுநில மன்னர் சிறீதரனே... கிளி. பொதுச்சந்தை அனர்த்தத்துக்கு முழுப்பொறுப்பாளி ஆவார். 

தீயினால் 90 கடைகள் முற்றாக சேதம்: செய்வதறியா நிலையில் கிளிநொச்சி வர்த்தகர்கள்.
காணொளி செய்தி: சக்தி டிவி நியூஸ்
ஆங்கோர் ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்றார் பாரதி. இன்று இந்த ஏழை எளிய மக்கள் விடும் கண்ணீர் நிச்சயம் இந்த குறுநில மன்னரின் பாராளுமன்ற கதிரையை வெட்டி சாய்க்கும்.
Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger