சிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை வழக்கு; 14 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Tuesday, October 11, 2016

சிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை வழக்கு; 14 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்!!!

சிறுப்பிட்டி பகுதியில்  இரு இளைஞர்கள் காணாமல்போய் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றம் சாட்டப்பட்ட 14 இராணுவத்தினரையும் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். 

சிறுப்பிட்டி பகுதியில் இரு இளைஞர்கள் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு சுமார் 18 வருடங்களின் பின்னர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,

மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தரராஜன் ஆகிய இளைஞர்கள் இருவர் கடந்த 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி மயிலங்காட்டு பகுதிக்கு உறவினருடைய திரும ணத்துக்காக சென்றுள்ளனர். 

இதன்போது அவர்கள் இருவரும் சிறுப்பிட்டி, புத்தூர் வாதரவத்தையில் அமைந்திருந்த இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் அச்சுவேலி பொலிஸாரால் 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த இராணுவ முகாமில் கடமையாற்றிய 16 இராணுவ வீரர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் 16 இராணுவத்தி னரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவ்வழக்கு கோவை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் இடப்பட்டது. 

சுமார் 18 வருடங்களின் பின்னர் சட்டமா அதிபரினால் இவ்விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு மேற்குறித்த இரு இளைஞர்களையும் கொலை செய்ததன் அடிப்படையில்  குறித்த 16 இராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்துமாறு யாழ்.நீதவான் நீதிமன்றுக்கும் அச்சுவேலிப் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.அதன் பிரகாரம் குறித்த 16 இராணுவ வீரர்களுக்கும் யாழ் நீதவான் நீதிமன்றால் அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டது.

அந்த வகையில் கடந்த 26 ஆம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ள ப்பட்ட இவ்வழக்கில் 16 இராணுவத்தினரில் 5 இராணுவத்தினரே மன்றில் ஆஜராகியிருந்தனர். ஐந்து பேரையும் நேற்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதுடன் ஏனைய 11 இராணுவத்தினரையும் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

அதன்படி குறித்த வழக்கு நேற்றைய தினம் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது தளபதி வீரசிங்க உட்பட சுமன்குமார, பிரேமதிலக, ஜெனக,சுனில், சமரசிங்க, பிரேமஜெயந்த, சுதக், பெரேரா, கேரத், சந்தரே, ஜெயக் கொடி, ரத்நாயக்க, ஜெகத் ஆகிய 14 இராணுவத்தினர் ஆஜராகியிருந்ததுடன் பீரிஸ் மற்றும் நிமால் எனும் 2 இராணுவத்தினர் கடந்த யுத்தத்தின் போது உயிரிழந்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. 

இராணுவத்தினரின் சார்பாக 6 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் குறித்த வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரும் கடந்த 1998 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அத்தோடு அவர்கள் இதுவரை பிணை நிபந்தனை எவற்றையும் மீளவில்லை எனவே நீதவான் நீதிமன்றில் வழங்கப்பட்ட பிணையை மேல் நீதிமன்று அல்லது குறித்த பிணையை வழங்கிய நீதவானே மாற்றவேண்டும் என தெரிவித்ததுடன் அவர்களுக்கு பிணை வழங்க வேண்டும் என கோரியிருந்தனர். \\

இதன்படி வழக்கை பரிசீலித்த நீதவான் பிணை விண்ணப்பம் தொடர்பான கட்டளையிடுவதற்காக 14 இராணுவத்தினரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.(செ-9)
 
Copyright @ www.valampurri.lk
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)