வடக்கு கிழக்கில் கால்நடைகளுடன் மனிதர்கள் நீரைத் தேடியலையும் அவலம்!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Monday, October 10, 2016

வடக்கு கிழக்கில் கால்நடைகளுடன் மனிதர்கள் நீரைத் தேடியலையும் அவலம்!!!

ஒக்டோபர் மாதத்தில் கிடைக்கப் பெறும் இரண்டாவது உகைப்பு மழையுடன் ஆரம்பமாகும் பெரும் போகம். இப் பயிர்ப்போகம் பின்னர் மேற்காவுகை மழையுடன் முன் கொண்டு செல்லப்படும். 
(இது ஒரு முன்மாதிரி புகைப்படம்)

ஆனால் இன்னும் இந்தப் பெரும் போக பயிர்ச்செய்கைக்கான மழை பெய்து கொடுக்காததால் ஈழத்தில் விவசாயிகள் வானம் பொய்த்து விடுமோ? எனும் பெருத்த ஏக்கத்தோடு வானத்தை வெறித்துப் பார்த்தவாறு பெருமூச்சை இறைத்தபடி காத்திருக்கின்றனர். 

ஈழத்தின் வடக்கு மாகாணத்தில் கடுமையான சூரிய வெப்பத்தையடுத்து நிலத்தடி நீர் ஆவியாகும் செயல்பாடு கூடியளவில் அதிகரித்து காணப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றது.

இதனால் திரும்பும் இடமெல்லாம் பச்சைப் புல் பூண்டுகளை காண்பதே அரிதான ஒரு சம்பவமாக இருப்பதோடு, கடுமையான வெப்பச் சூழலையடுத்து குளங்கள், ஆறுகள், குட்டைகள் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களிலும், கிணறுகளிலும் நீர் வற்றி கடும் வறட்சி நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

வரட்சி நிலையால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதோடு, கால்நடைகளும் நீர் நிலைகளைத் தேடி அலைவதையும், மோர், இளநீர், சர்பத் உள்ளிட்ட கோடை கால குடிபானங்களை விற்பனை செய்யும் சாலையோர சிறு வியாபார கடைகளை மக்கள் அதிகளவில் நாடுவதையும் அவதானிக்க முடிகின்றது.

ஆயினும் மழை தங்களை கைவிடாது என்ற உச்சபட்ச நம்பிக்கைகளோடு வயல் காணிகள், தோட்டம் துரவுகளை உழுது விதைப்பதற்கு தயார்ப்படுத்தி விட்டு விவசாயிகள் மழையை எதிர்பார்த்தவாறு காத்திருக்கின்றனர்.

இதேவேளை இலங்கையில் வரட்சியுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடித்து வருவதால், நாடு முழுவதும் 5 இலட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.நன்றி: Newsetv
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)