துப்பாக்கிகளுக்கு பின்னால் உள்ள மனோநிலை- யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை!!! - Yazhpanam

வெள்ளி, 28 அக்டோபர், 2016

துப்பாக்கிகளுக்கு பின்னால் உள்ள மனோநிலை- யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை!!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை! துப்பாக்கிகளுக்கு பின்னால் உள்ள மனோநிலை!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறீலங்கா பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலை, தமிழ் அரசியல் தலைமைகள் கையாண்ட விதம் தொடர்பில் பல்வேறு கேள்விகள், வாதப்பிரதிவாதங்கள், அதிருப்திகள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக, மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடம் newsetv நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தது. 

காட்டுக்கூச்சல் போட்டுவிட்டு, ‘பிணத்தோடு நீதியையும் புதைத்துவிட்டு’ எல்லாவற்றையும் ஒரு சம்பவமாக கடந்துபோய்க்கொண்டிருக்கும் தமிழர் உணர்ச்சிப்பேச்சு அரசியல் சூழலில்,

இந்த மாணவர்களின் படுகொலைக்கு பின்னால் உள்ள துப்பாக்கிகளின் மனோநிலை, படுகொலைக்கு பின்னால் உள்ள அரசியல், படுகொலைகளின் மூலவேர், படுகொலைகளின் அரசியல், தொய்வும் சோர்வும் கொண்டிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட குணமும் - களமும், மாணவர்களை அரசியல் நீக்கம் செய்யும் பல்கலைக்கழக சமுகம் - அரசியல் தலைமைகள் - இலத்திரனியல் ஊடகங்கள், சம்பவங்களின் வீரியத்தை கூர்மைப்படுத்தி அதனை தக்கவைத்து அடுத்த கட்ட அரசியலை நோக்கி நகர்த்த முடியாத தமிழ் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனங்கள், வெறுப்பும் சலிப்பும் அடைந்துவரும் தமிழ் அரசியல் பங்கெடுப்பாளர்கள், இப்படி பலதரப்பட்ட விடயங்களையும் இந்த காணொளியில் ஆழமாக அலசி ஆராய்ந்து பேசுகின்றார்கள் ஆளுமைகள். 

‘தமிழ் தலைமைகள், அவர்களுக்கு வாக்களித்த மக்கள், சிறீலங்கா அரசு’ இந்த தரப்புகளின் நடத்தைகள் மீதும், அவர்களின் குற்றங்கள் குறைகள் பழுதுகள் செல்வாக்குகள் மீதும், நாலாபுறமும் சுற்றிச்சுழன்று திராணியோடு 'கருத்து அரிவாளை' வீசியுள்ளார்கள் இந்த ஆளுமைகள்.

நன்றி: Newsetv
" });

Banking News

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Post Top

Your Ad Spot