இது என்ன புதிசா இருக்கே..?- கொண்டம் அரசியல்!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 2, 2016

இது என்ன புதிசா இருக்கே..?- கொண்டம் அரசியல்!!!

என்னாது ‘கொண்டம்’ அரசியலா? இது என்ன புதிசா இருக்கே… என்று நீங்கள் தலையை பிய்த்துச் சொறிந்து யோசிப்பது நமக்குப் புரிகிறது. ஆயினும் இதையெல்லாம் நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். உண்மை இது தான்! 

தமிழர் அரசியல் தளத்தில் ‘கொண்டம் அரசியல்’ என்ற புதியதொரு சொல்லாடல் புழக்கத்தில் பேசப்பட்டு வருவது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? குறிப்பாக ‘கொண்டம் அரசியல்’ எனும் இந்தப் புதிய சொல்ப்பதம் சிறீலங்காவின் அதியுயர் இராணுவத் தளபதிகள் வட்டாரத்திலும், பாதுகாப்பு அமைச்சின் செயலகத்திலும் பாவிக்கப்பட்டு வருகின்றது. 

இதுவொரு சங்கேத குறியீடு பாசையாக இருந்தாலும் கூட, சமகால தமிழர் அரசியலின் போக்குகளின் அடிப்படையிலும், உள்ளுர் - பிராந்திய - பூகோள அரசியல் நிகழ்ச்சிநிரலை நெறிப்படுத்தும் கொள்கை வகுப்பாளர்களின் எதிர்வுகூறல்களின் வெற்றிகள், அதற்கு இசைவான அசைவுகள் - சாத்தியப்பாடுகளின் அடிப்படையிலும், இனி இந்த சொல்ப்பதம் இராஜதந்திர வட்டாரங்களிலும் பகிரங்கமாக பேசப்படும் அளவுக்கு ‘றீஜ்’ ஆகி வருகின்றது. 

இனி அரசியல் ஆய்வு பத்திகள் எழுதுபவர்களும் இந்த சொல்லாடலை வெளிப்படையாகவே பாவிக்கவும் கூடும்.

கடந்த காலப்போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளிக்கும் நிகழ்ச்சி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீரிமலையில் இடம்பெற்றது. 

அங்கு யாழ்.மாவட்ட கூட்டுப்படைகளின் கட்டளைத்தளபதியும் சமுகமளித்திருந்தார். தமிழ் அரசியல் வித்துவான்களான இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த வித்துவான்கள் போதும் போதும் என்று திருப்தியுறும் அளவுக்கு, எல்லை மீறிய வரவேற்பும், உபசரிப்பும், கவனிப்பும் செய்யப்பட்டது. 

அப்போது இராணுவத்தளபதி கிசுகிசுத்தார். 

‘இதுகள் கொண்டம்கள். எங்களிட்ட நிறைய கொண்டம்கள் இருக்கு. யுஸ் பண்ணிட்டு கழட்டி வீசினது போல இதுகளையும் தூக்கி வீசிறுவம். டக்ளஸ் ஒரு கொண்டம். கருணா ஒரு கொண்டம். பிள்ளையான் ஒரு கொண்டம் அதுபோல. எல்லாம் இந்த சர்வதேச வோர் க்ரைம் பிரச்சினைகளை சமாளிக்கும் வரைக்கும் தான். அதுவரைக்கும் இந்த மில்ரி கட்ஸ்ஸை எல்லாம் விட்டிட்டு எல்லாவற்றையும் சகிச்சுக்கொள்ள வேண்டியிருக்கு’ என்றார்.

வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)