அமெரிக்கத் தேர்தல் முடிவு எதை வெளிப்படுத்துகிறது- ஒரு பார்வை!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
Web hosting
BREAKING ****!!

Thursday, November 10, 2016

அமெரிக்கத் தேர்தல் முடிவு எதை வெளிப்படுத்துகிறது- ஒரு பார்வை!!!

உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த் திருந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகியது.
 
தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்கர்கள் தவிர்ந்த ஏனைய நாட்டு மக்களின் எதிர்பார்ப்பெல்லாம் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்ரனே அமெரிக்க ஜனாதிபதியாக வருவார் என்பதாக இருந்தது.

ஹிலாரி கிளின்ரன் வெற்றி பெற்றிருந்தால் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமை ஹிலாரிக்காக இருந்திருக்கும். என்ன செய்வது கொடுப்பனவு அவ்வளவுதான்.

எனினும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஹிலாரி என்றிருந்த எதிர்பார்ப்புக்கள் அடிபட்டுப் போனதற்கான காரணம் என்ன? என்பது பற்றி ஆராய்ந்தால், 

அமெரிக்கர்கள் தங்கள் நாட்டின் ஜனாதிபதி உண்மை சொல்பவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் என்பது தெரியவரும்.

அதாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் என்பவர் மீது பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் எந்தவித மறுப்பையும் தெரிவிக்காமல் தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் தனது கொள்கைகள் எங்ஙனமாக இருக்கும் என்பதை மட்டுமே முன்வைத்திருந்தார். இங்குதான் அமெரிக்க மக்கள் ஒரு தீர்ப்பை எழுத முடிவு செய்கின்றனர்.

அதாவது ஹிலாரி கிளின்ரன் தரப்பு ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளர் மீது குற்றம் சுமத்துவதில்; அவரை ஒரு பிழையானவராகக் காட்டுவதில் முனைப்புடன் செயற்பட்டனரே தவிர தான் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்காவை எப்படி கொண்டு செல்லுவேன் என்பதைப் பற்றித் தெளிவாகக் கூறவில்லை. 

தவிர, டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஹிலாரி தரப்பினர் ஒரு தடவை பின்னோக்கிச் சென்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த - ஹிலாரியின் கணவனான பில் கிளின்ரன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையும் அந்தக் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட மொனிக்கா என்ற பெண்மணி முன்வைத்ததையும் அறிய முடியும்.

அப்படியானால் குற்றச்சாட்டில் பில் கிளின்ரனுக்கு மன்னிப்பு வழங்கிய அமெரிக்கர்கள் டொனால்ட் ட்ரம்புக்கு மன்னிப்பு வழங்குவார்கள் என்பது ஏற்புடையதே.

எது எவ்வாறாயினும் உலக மக்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி வருவார் என நம்புகின்றனர். எனவே அதை தோற்கடித்து அமெரிக்கர்கள் தனித்துவமானவர்கள் என்பதை நிரூபிப்பதற்காகக் கூட தங்கள் வாக்குகளை திசை திருப்பக்கூடியவர்கள் அமெரிக்க மக்கள்.

தவிர, அமெரிக்காவின் தனித்துவம் வல்லாதிக்கம் என்பவற்றைத் தொடர்ந்தும் தக்க வைப்பதற்கு பெண் தலைமை ஆகாது என்றுகூட அமெரிக்கர்கள் சிந்தித்திருப்பார்கள் என்று கூறினால் அதுவும் தவறில்லை.


எது எப்படியாயினும் அமெரிக்கத் தேர்தலிலும் அதில் ஹிலாரியின் தோல்வியும் அமெரிக்கர்கள் தொடர்ந்தும் தாங்கள் உலக வல்லரசாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர் என்பதையே  காட்டி நிற்கின்றது. 

                                                                                  நன்றி: யாழ் வலம்புரி.
                                                 

 
 
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)