Headlines News:
Home » » மாபெரும் தமிழின ‘கலாசார அழிப்பில் - திணிப்பில்’ இலங்கை அரச பயங்கரவாதம்!!!

மாபெரும் தமிழின ‘கலாசார அழிப்பில் - திணிப்பில்’ இலங்கை அரச பயங்கரவாதம்!!!

Editor By Yazhpanam on திங்கள், 14 நவம்பர், 2016 | பிற்பகல் 2:46:00

மாபெரும் தமிழின ‘கலாசார அழிப்பில் - திணிப்பில்’ சிறீலங்கா அரச பயங்கரவாதம்! (Video) 

2009 மே காலப்பகுதி வரை தமிழ் மக்களின் வாழ்விலும் வளத்திலும் கோலோச்சிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கைக்குள் செயல்பாட்டு தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில், 

தமிழ் பண்பாட்டுச்சமுகம் ‘சுயஒழுக்கம் - சுயகட்டுப்பாட்டை’ இழந்து, தரம் தாழ்ந்துவரும் மோசமான நிலைமைகள் மிகுந்த கவலையையும் - பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றது. 

2009 மே க்குப்பின்னர் கடந்த ஏழு வருடங்களாக தாராளமாக புழக்கத்தில் விடப்பட்டுள்ள போதைப்பொருள்கள் - ஆபாச காணொளிகள், மடைதிறந்து விடப்பட்டுள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்கள் என்று தமிழர் தாயகம் பச்சையான கலாசார கருவறுப்புக்குள் சிக்க வைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு வருகின்றது.  

தமிழர் பாரம்பரிய பண்பாட்டுத்தொடர்ச்சியான கூட்டுக்குடும்ப வாழ்க்கை - பழக்க வழக்க முறைமைகள் சிதைவடைய போரும் அதைத்தொடர்ந்த தடையற்ற - கட்டுப்பாடற்ற நவீனத்துவ ஊடுருவல்களும் ஒரு காரணமாகவிருந்தாலும் கூட, 

இந்த மாபெரும் பண்பாட்டுச்சிதைப்பில்…

சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கும் - அதிகார வர்க்கத்தினருக்கும் உள்ள வகிபாகம் தான் என்ன? தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உள்ள பங்களிப்பு தான் என்ன? என்பது தொடர்பில் newsetv சிவில் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தது. 

தமது ஆட்சி நிலத்தில், தமக்கே உரித்தான மொழி, கலை, கலாசாரம், பாரம்பரியம், மரபுரிமைகளை பாதுகாத்து உலக சமுகங்களுக்கு முன்பாக அடையாளம் பெற்ற தமிழ் இனம், தற்காலத்தில் நெறிகெட்டுப் போகும் நடத்தைப் பிறழ்வுகளால் பிற இனங்களுக்கு முன்னே கூனிக்குறுகி அவமானப்பட்டு நிற்க, சிறீலங்கா அரச படைகளால் ‘தமிழ் இளையோர்கள் ஒரு கருவியாக’ பாவிக்கப்படும் மோசமான நிலைமைகள், 

அறிந்தோ அறியாமலோ இந்த மாபெரும் ஊழிச்சுழிக்குள் வீழ்ந்து அதிலிருந்து விலகி விடுபட்டு பொது அமைதி வாழ்க்கைக்குள் வாழ்வதற்கு திரும்பும் அத்தகைய இளையோர்கள் மீதும், தமிழ் சிவில் சமுக அரசியல் வெளியை எப்போதும் ஒரு சூடான இயங்குதளமாக - பரபரப்பான பேசுபொருளாக வைத்திருக்க துடிக்கும் சிவில் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மீதும், அதே அரச பயங்கரவாதம் ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எனும் லத்தியை பிரயோகிக்கும் ஆபத்தான நிலைமைகள் தொடர்பிலும், 

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தின் உன்னத இலட்சியங்களுக்காக பல ஆயிரம் இளையோர்கள் உயிர்கொடை செய்த மரபிலிருந்து குறிப்பிட்டளவு இளையோர்கள் சிலர் சமகாலத்தில் நெறி தவறிச் செல்லும் போக்குகளை கட்டுப்படுத்த தமிழ் அரசியல் தலைமைகளிடம் கொள்கையும் - தெளிவும் உடைய வேலைத்திட்டங்கள் இல்லாத சிந்தனை வறட்சி தொடர்பிலும், 

கைதுகளுக்கு பின்னால் உள்ள நுணுக்கமான அரசியல் தொடர்பிலும் ஆழமான கருத்துகளை இந்த காணொளியில் பகிர்ந்துகொண்டுள்ளனர் ஆளுமைகள்.


நன்றி: Newsetv செய்திக்குழுமம்.
Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger