சிறிலங்காவின் தேசிய புலனாய்வு அதிகாரியை தடுத்து வைக்குமாறு கோரிக்கை!!! - Yazhpanam

வியாழன், 17 நவம்பர், 2016

சிறிலங்காவின் தேசிய புலனாய்வு அதிகாரியை தடுத்து வைக்குமாறு கோரிக்கை!!!

சித்திரவதைகளுக்கு எதிரான (CAT-Convention Against Torture) ஐ.நா குழுவின் 59 ஆவது கூட்டத்தொடர் நவம்பர் 14, 15, 16 ஆம் திகதிகளில் ஜெனிவாவில் நடைபெற்றது. இக் கூட்டத் தொடரில் பிரித்தானிய தமிழர் பேரவை தமிழர் தரப்பின் சார்பாக முழு நாட்களிலும் கலந்து கருத்துப் பகிர்வினை ஆற்றியிருந்தது. இதில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வு பொறுப்பு அதிகாரி திரு. சிசிர மெண்டிஸ் (Sisira Mendis) தற்போது ஜெனிவாவில் ஜக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கு எதிரான குழு முன்னிலையில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாக பங்கெடுத்திருந்தார்.
இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் OHCHR அறிக்கையின் படி இலங்கையில் இறுதி யுத்த காலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்களில் இவரும் ஒருவர் ஆவார். 
அமெரிக்காவிலுள்ள USTPAC மற்றும்  பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இணைந்து சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள குழுவில் இலங்கை அரசாங்கம் பங்கேற்பதை ஊக்குவிக்கும் அதே வேளை பாரிய சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்களை இக்குழுவில் இடம்பெறச் செய்வதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.
USTPAC அமைப்பின் தலைவரான Dr காருண்யன் அருளானந்தம் கருத்து தெரிவிக்கையில்  இலங்கையில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு நீதி கோரி நிற்கும் மக்களை இது அவமானப்படுத்துவது ஆகும் என்றார்.
2008-2009 காலப்பகுதியில் திரு சிசிர மென்டிஸ் அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் (TID) பொறுப்பதிகாரியாகவும், குற்றப்புலனாய்வு துறையின் (CID) உதவி பொலிஸ்மா அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். எனவே சர்வதேச சட்டங்களை பாவித்து சுவிஸ் அரசாங்கமானது திரு. சிசிர மெண்டிசை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார்  தெரிவிக்கையில் திரு. சிசிர மெண்டிசை இக் குழுவில் அனுப்புவதன் ஊடாக தண்டனைகளில் இருந்து தப்பித்து கொள்ளும் வழமையான பழக்கத்தை கொண்ட இலங்கை அரசாங்கம் அநாகரீகமான தன் உண்மையான சுயரூபம் இது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2015  ஐ.நா மனித உரிமை கழக ஆணையாளரின் அறிக்கையில் வலியுறுத்தியவாறு சர்வதேச நீதிபதிகளை கொண்ட  கலப்பு நீதிமன்றில் சர்வதேச சட்டவாளர்கள், வழக்குத் தொடுநர்கள், மற்றும் விசாரணையாளர்களை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். 
இலங்கை பற்றிய ஐ.நா சித்திரவதைகள் விசாரணைக் குழுவின் அமர்வில், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட இத்தகைய நபர்களின் பிரசன்னமானது   சர்வதேசமயப்பட்ட நீதிமன்றத்தின் விசாரணைகள் தான் தேவையென்பதனை முன்னெப்போதையும் விட இன்று வலியுறுத்தி நிற்கின்றது.
" });

Banking News

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Post Top

Your Ad Spot