Headlines News:
Home » » எது பண்பாடு? எதுவரை பண்பாடு? – யாழில் நிலாந்தன் சிறப்புரை!!!

எது பண்பாடு? எதுவரை பண்பாடு? – யாழில் நிலாந்தன் சிறப்புரை!!!

Editor By Yazhpanam on வெள்ளி, 18 நவம்பர், 2016 | பிற்பகல் 12:30:00

எது பண்பாடு? எதுவரை பண்பாடு? – யாழில் நிலாந்தன் சிறப்புரை (Video)

பண்பாடு என்றால் என்ன? அதை நாங்கள் எப்படி விளங்கி வைத்திருக்கிறோம்? ஈழத்தமிழர் பண்பாடு என்ற ஒன்று அப்படி சரியாக இருக்கிறதா? எங்களுடைய சடங்குகள், எங்களுடைய நம்பிக்கைகள், எங்களது ஆடை, உணவு பழக்க வழக்கங்கள், எங்களது சமுக கூட்டுறவு வாழ்க்கை முறைகள், எல்லாம் எதனைப் பின்பற்றி இருக்கின்றன? 

இந்தப் பொருளாதார உலகம் உங்களை எப்படிப் பார்க்கின்றது? இன்று இந்தப் பூமியில் தூயது என்று ஏதாவது இருக்கிறதா? பூமியில் உள்ள எல்லாப் பண்பாட்டு பரப்புகளும் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? 

எங்கள் வாழ்க்கை முறைகள் எப்படி எல்லாம் மாறி விட்டன? இன்று பிறக்கப் போகும் குழந்தை பார்க்கப் போகும் முதல் காட்சி என்ன? பூகோளக் கிராமத்தில் உறவுகள் எல்லாம் கடவுச்சொற்களால் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன? பெற்றோரால் நெருங்க முடியாத பிள்ளைகள் உருவாகி விட்டதன் விளைவுகள்? அதிநவீன தொழில்நுட்பங்களின் விளைவால் இப்பூமிப்பந்தில் இருந்து என்னவெல்லாம் காணாமல் போய் விட்டன? 

இன்னும் சில ஆண்டுகளில் கலியாண வீட்டுக்கு முள்முருங்கைக்கு என்ன செய்யப் போகின்றோம்? எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு தெரியாமல் போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றார்கள் என்றால், எங்களை விட பிள்ளைகள் மேல் செல்வாக்கு செலுத்தக் கூடிய வேறு யாரோ வெளியில் இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம். அந்த நபர்கள் யார்? அப்படியாயின் எங்களது பிள்ளைகள் மேல் ஏன் எங்களால் செல்வாக்குச் செலுத்த முடியாமல் போய் விட்டது? 

தொழில்நுட்பம் பிள்ளைகளையும், பெற்றோர்களையும் எவ்வாறு பிரிக்கிறது? நடுத்தர, வயதான  பெண்களும், ஆண்களும் தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இளைஞர்களும், யுவதிகளும் சமூக வலைத்தளங்களை பார்த்து எல்லாவற்றையும் ஸ்கொரோல் பண்ணியே கடந்து விடப்பார்க்கின்றார்கள். இவற்றின் விளைவு?  

எவனோ ஒருவன் இங்கே போதைப்பொருட்களை விதைத்து எம்மை சீரழிக்கிறான் என்றால், நாங்கள் அவற்றிலிருந்து எமது பண்பாட்டை பாதுகாக்க எவ்வாறான கவசத்தை கொண்டிருக்கிறோம்? எங்களில் எத்தனை பேர் முதியோரை வீட்டில் வைத்து பராமரிக்கிறோம்?  மொத்தத்தில் நாங்கள் வாழும் வாழ்க்கை சரியானதா? பூனை குட்டிகளை காவிக்கொண்டு திரிவதனைப் போல பிள்ளைகளை ஒவ்வொரு ரியூட்டறிக்கும், பல கோர்ஸ்களுக்கும் காவிக்கொண்டு திரிகிறோமே. படி படி என்று நெரித்து என்னத்தைக் கண்டோம்? எத்தனை விஞ்ஞானிகளை உருவாக்கினோம்? உலகம் மெச்சும் எத்தனை நிபுணர்களை உருவாக்கினோம்? 

நாங்கள் எதற்குமே கேள்வி கேட்காமல் ஒரு சிஸ்ட்டத்தின் கைதிகளாகவே இருக்கிறோம். கிடுகு வேலிகளை அகற்றி மதில்களை கட்டி எழுப்பினோம். ஆனால், பண்பாட்டு வேலிகளை இன்னமும் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறோம். உள்நாட்டு ஆபத்து, வெளிநாட்டு ஆபத்துகளை எப்படி சமாளிக்கப் போகின்றோம்? 

ஈழத்தமிழர்களாக இருப்பதனாலேயே 2009 மே க்குப் பின்னர் எதிர்கொள்ளும் எங்களுக்கேயான சவால்களையெல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகின்றோம்? எல்லாவற்றுக்கும் இந்த காணொளியில் பதிலளிக்கிறார் அரசியல் சமுக ஆய்வாளர் திரு.நிலாந்தன்  
செய்திக்குறிப்பு: யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்,  கலாசாரப்பேரவை மற்றும் கலாசார அதிகாரசபையுடன் இணைந்து நடாத்திய கலை இலக்கிய பெருவிழா – 2016, யாழ். திருமறைக்கலாமன்றத்தில் கலாபூசணம் செல்லையா சிவப்பிரகாசம் அரங்கில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கலாசாரப்பேரவையின் தலைவர் தயானந்தன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை 17.11.2016 பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.  

தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் சார்ந்த அம்சங்கள் நிறைந்த கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்ட குறித்த பெருவிழாவில், யாழ்ப்பாண பிரதேச செயலக, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், இசைக்கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் பெருத்த விருப்பத்தோடு பங்கேற்றிருந்தனர். குறித்த பெருவிழாவில், ஈழத்தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு தொடர்பில் அரசியல், சமுக ஆய்வாளர் திரு.நிலாந்தன் சிறப்புரை ஆற்றினார்.
Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger