தொடர் மழையால் யாழ் நகரப்பகுதி , தாழ்நிலப்பகுதி மக்கள் பாதிப்பு!!! - Yazhpanam

செவ்வாய், 22 நவம்பர், 2016

தொடர் மழையால் யாழ் நகரப்பகுதி , தாழ்நிலப்பகுதி மக்கள் பாதிப்பு!!!

தற்போது  தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் யாழ் நகரம் வெள்ளக்காடாக மாறிவருகின்றது.  யாழ்ப்பாணம் பஸ் நிலை யத்திற்கு அருகிலுள்ள நடைபாதை கடைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கடைகளிற்குள் வெள்ளம் புகுந்தமையால் வியாபாரம் தடைப்பட்டதுடன் குறித்த பகுதியில் போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளது. 


அப்பகுதியில் மழை நீர் வடிவதற்காக அமைக்கப்பட்ட வாய்க்கால் குப்பைகள் தேங்கிய நிலையில் அடைக்கப்பட்டு காணப்படு வதால் தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி வியாபாரிகள் பாரிய இடர்பாடுகளை எதிர் நோக்கியுள்ளனர்.
 மழை வெள்ளம் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பலர் இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் பலர் தங்க இடம் அற்ற நிலையில் மழை வெள்ளத்துக்கு மத்தியில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நன்றி: யாழ் உதயன்.
" });

Banking News

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Post Top

Your Ad Spot