அரசியல் செயற்பாட்டாளர் கைதின் மூலம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கும் அரசு!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Tuesday, November 8, 2016

அரசியல் செயற்பாட்டாளர் கைதின் மூலம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கும் அரசு!!!

மஹிந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் ஆசீர்வாதத்துடன் யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை அச்சுறுத்துவதற்கும், யாழில் கொள்ளை, கொலைகளை மலிவாக நடத்துவதற்கும், கலாச்சார சீர்கேடுகளை இளைஞர்கள் மத்தியில் பரப்புவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு அடிதடிக் குழுவே ஆவா என பல சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளே மேடைகளில் பகிரங்கமாக கூறி வருகின்ற நிலையில் தற்போது அதன் செயற்பாடுகள் மீண்டும் மேலுழுந்து வருவதாக காட்டப்படுவதன் நோக்கம் தான் பல்வேறுபட்ட கேள்விகளை எம் முன் மத்தியில் எழுப்பியுள்ளது. 

மேற்படி காரணங்களுக்காக ஆவா உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரான காலப்பகுதிகளில், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்காமல் வைத்திருப்பது எவ்வாறு? தமிழ்த் தேசியச் சார்புள்ள இளைஞர்கள் மற்றும் மக்களை ஒடுக்குவது எவ்வாறு?, சிறையில் தள்ளுவது எவ்வாறு? என்று அரச தரப்பு சிந்தித்ததன் விளைவாக கூட ஆவா பூச்சாண்டியின் மீளுயிர்ப்பினை நோக்க வேண்டியுள்ளது. 

இதன் தற்போதைய தொடர்ச்சியாக தான் TID யினரின் எழுந்தமானமான கைதுகளை பார்க்க வேண்டியுள்ளது. 
போர் முடிந்து ஏழாண்டுகளாகியுள்ள நிலையில் தமிழர் விரோத சட்டமான  பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க வேண்டும் என தாயகத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி, சர்வதேச இராஜதந்திர மட்டங்களிலும் சரி தொடர்ச்சியாக குரல்கள் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், அடிதடிக் குழுவைக் கைது செய்வதற்கே TID யினைப் பயன்படுத்துவதனூடாக பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு தொடர்ச்சியாக உயிர்கொடுக்க நல்லாட்சி அரசு முற்பட்டுள்ளமை பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஒரு பிரச்சினைக்குரிய தரப்பாக காட்டி கட்சியின் அரசியல் வேலைத் திட்டத்தை முடக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு சோடிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளது. இதன் ஓர் அங்கமாகவே கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இவரது கைது தொடர்பில் தாய், தந்தையரிடமோ, கட்சியிடமோ எந்த தகவலும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 
ஒரு தமிழ் கட்சியில் அங்கம் வகிக்கும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்படுகின்ற போது, ஏனைய சில தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குதூகலிப்பதை சமூக வலைத்தள பதிவுகள், வெகுஜன உரையாடல்கள் மூலம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. "தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்" என்பார்கள். 
கைதானவர் சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறார், அண்மைய செயற்பாடுகள் என்ன என்று பார்க்காமல் ஒரு கட்சியின் அங்கத்தவர் என்று வெறுமையாகப் பார்ப்பதால்  அவரது கைதுக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுப்பதில் இருந்து தவறி விடுகின்றோம்.

ஆனால், இந்த மனோநிலை பேராபத்தை ஏற்படுத்தும் என உணராமல் சில அரசியல் கோமாளிகள் செய்யும் வித்தைகளைப் பார்க்க வேடிக்கையாக இருக்கின்றது.  

மஹிந்த, மைத்திரி, ரணில் தரப்புக்கள் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் சிங்கள தேசியவாதம் என்று வருகின்ற போது ஓரணியில் நின்று ஒற்றுமையாக குரல் கொடுக்கும் சூழலில், சில மன நோய் பீடித்த தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் கட்சிகளும்  சுயலாபங்களுக்காக, கறுப்பு, வெள்ளை என பாகுபாடு காட்டி, பிரிந்து நின்று விமர்சிப்பது எங்களுக்கிடையிலான பலவீனத்தையே காட்டுகின்றது. சிங்களவர்களிடம் தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றது.

எப்படி தூக்குத் தண்டனை என்ற கொடிய தண்டனையை மனித குலத்திற்கே எதிரானது என்று ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றோமோ, அப்படியான ஒரு எதிர்ப்பை இப்படியான கொடிய சட்டங்களுக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் ஓரணியில் நின்று காட்ட வேண்டும். இனியும் இப்படியான சட்டங்கள் தமிழ் இளைஞர்கள் மீது பாய்வதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது.

ஆயுதப் போராட்ட காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் ஊடாக கைதான ஏராளமான அப்பாவித் தமிழ் இளைஞர்கள் இன்றும் சிங்களச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரது குடும்பங்கள் மிகவும் வறியவை. இதனால் அவர்கள் மீதான வழக்குகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இழுப்பட்டுச் செல்லும் சூழல் காணப்படுகின்றது. 

உண்மையில் ஒருவர் அடிதடிக் குழு அங்கத்தவர் என்றால், இலங்கையின் நீதித்துறை மூலமே சரியான தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்க முடியும். அதற்கு சட்டத்தில் சிறந்த ஏற்பாடுகளும் உள்ளன. 

அதையெல்லாம் விடுத்து கேள்வி கேட்க முடியாத கொடிய சட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பாய்ச்சுவதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது. 

எல்லாவற்றையும் தாண்டி பலத்த இராணுவ, பொலிஸ் கண்காணிப்பில் உள்ள யாழ் மாவட்டத்தில் இலக்கத் தகடற்ற ஜீப், வாளுடன் மோட்டார் சைக்கிள் ரவுடிகள், கஞ்சா கடத்தல், கலாச்சாரப் பிறழ்வுகள் எல்லாம் பெரும் மாய, மந்திர வித்தையாகத் தான் உள்ளது. இப்படியான சூழலில் இவை எல்லாம் சாத்தியம் என்றால் இதற்குப் பின்னால் இருக்கும் அந்த இராணுவ, பொலிஸ் உயரதிகாரி யார், யார் என்கிற கேள்வி எழுகின்றது? 

புலிகளின் காலத்தில் போல்ஸ் வைத்திருக்கிறார், குண்டு வைத்திருக்கிறார் எனக் கூறி துல்லியமாக கைது செய்த குற்றத் தடுப்பு பொலிஸாரால், தற்போது ஆவா மற்றும் பல ரவுடிகளை துல்லியமாக கைது செய்ய முடியாதிருப்பது ஏன்? 

இன்று தெருவில் வாளுடன் திரிபவர்கள், கஞ்சா கடத்துபவர்கள், ரவுடிகள் யாரும் இராணுவம், பொலிஸாரின் கண்களுக்கு தெரியாமல் இருப்பது தான் உலக மகா வேடிக்கையாக உள்ளது. 

இலங்கை அரசு அப்பாவிகளை சுட்டுக் கொல்வது, அரசியல் செயற்பாட்டாளர்களை கைது செய்வதற்கு கூட இங்கே ஒரு தீர்வைக் காண முடியாமல், நாங்கள் சர்வதேசத்தை நாட வேண்டியுள்ளது. 

ஆவா போர்வையில் தமிழ்த் தேசியத்துக்காக செயற்படும் இளைஞர்களை ஒடுக்குவதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது.  

மஹிந்த அரசு ஹத்துருசிங்கவை வைத்து ரவுடிக் குழுக்களை இயக்கியது போல் நல்லாட்சி அரசும் யாரை வைத்து இந்தக் குழுக்களை மீள உயிர்ப்பிக்கின்றது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.   

தமிழ் மக்களின் மத்தியில் அரசியல் தெளிவுபடுத்தல்கள், வேலைத்திட்டங்கள், சமூக நலன் சார் திட்டங்கள் சில அரசியல் கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் அரசியல் செயற்பாட்டாளரின் கைது இவற்றை எல்லாம் அப்படியே முடக்கிப் போடும் வகையில் அமைந்துள்ளது. 

தமிழ் மக்கள் உரிமைகள் எவற்றையும் கேட்டு விட முடியாது, தருகிற சலுகைகளை பெற்றுக் கொண்டு பேசா மடந்தையாக இருக்க வேண்டும் என்பதே, காலம் காலமாக சிங்கள தலைமைகள் எமக்கு உணர்த்திவரும் பாடமாகும். 

அப்படி மீறினால் கைது செய்யப்படுவார்கள் என்கிற முன்னெச்சரிக்கை மணியாகத் தான் அலெக்ஸ் கைதை நோக்க வேண்டியுள்ளது.

என்ன செய்யப் போகிறது தமிழர் தரப்பு?

செய்திNewsetv செய்திக்குழுமம்
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)