சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்! வலியுறுத்தி வவுனியாவில் பேரணி!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Saturday, December 10, 2016

சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்! வலியுறுத்தி வவுனியாவில் பேரணி!!!


சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்! வலியுறுத்தி வவுனியாவில் பேரணி (Photos)

டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், ‘தமிழ் மக்களின் கூட்டு உரிமையையும், அரசியல் உரிமையையும், சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வதை உறுதிசெய்’ என்று வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தில் கவனவீர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. 


தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின்  (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Tamil Homelandபொருளாளர் திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை தலைமையில், வவுனியா கந்தசுவாமி ஆலய முற்றத்திலிருந்து இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கிய குறித்த பேரணி, வவுனியா நகர் பஸார் வீதியூடாக மில் வீதியையடைந்து அங்கிருந்து சூசைப்பிள்ளையார்குளம் வீதி சுவர்க்கா விருந்தினர் மண்டபத்தை சென்றடைந்தது. 

தொடர்ந்து மண்டப நிகழ்ச்சிகள் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவர் திருமதி ஆஷா நாகேந்திரம் தலைமையில் நடைபெற்றது. 

பேரணியில் கலந்துகொண்ட சங்கத்தின் உறுப்பினர்களின் பங்களிப்போடு, மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் அனுப்புதல். 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை சிறீலங்கா அரசையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பையும் தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி, நடப்பாண்டின் இறுதியில் டிசம்பர் 30 அன்று அடையாள உணவு தவிர்ப்பு நிகழ்ச்சியை முன்னெடுத்தல்.

குறித்த அடையாள உணவு தவிர்ப்பு நிகழ்ச்சியில், தாங்கள் வலியுறுத்தும் கோரிக்கைகளுக்கு காத்திரமான தீர்வுகளை புதிய ஆண்டில் (2017 தைப்பொங்கலுக்கு முன்னர்) தெரியப்படுத்தாவிடின் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடருதல். ஆகிய தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன. 

குறித்த நிகழ்ச்சியில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, தலைமைக்குழு உறுப்பினர் சு.வரதகுமார் உட்பட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 
 
 

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)