வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு அடித்த சம்பவம் யாழில்..!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Tuesday, January 17, 2017

வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு அடித்த சம்பவம் யாழில்..!!!

வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு அடித்து பிள்ளையாரிடம் தெருவால் போனவன் வரத்தை பெற்று போக தேங்காய்க்கு சொந்தகாரன் ஓரமாக நின்று பார்த்துட்டு நின்றானாம். அப்படி ஒரு சம்பவம் இன்று யாழ்ப்பணத்தில் நடந்தது.தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின்(MGR) 100ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
யாழில் இதுவரை காலமும் எம்.ஜி.இராமசந்திரனின்(MGR) #பிறந்ததினம் , #நினைவுதினம் ஆகிய தினங்களில் யாழ் #எம்_ஜி_ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் என்பவரே நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வந்தார்.
இவரின் சொந்த நிதியில் தான் #யாழ் .#கல்வியங்காட்டு #சந்தை பகுதியில் எம்.ஜி.இராமசந்திரனின்(#MGR) சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் #கோப்பாய் #சுந்தரலிங்கம் என்பவர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் , நினைவு தினம் ஆகிய தினங்களில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து #அஞ்சலி செலுத்தி வறிய மக்களுக்கு உடுபுடவைகளும் வழங்குவார். இந்நிகழ்வுகளில் கல்வியங்காட்டு சந்தை வர்த்தகர்கள் உட்பட சிலரே கலந்து கொள்வார்கள்.


ஆனால் இன்றைய தினம் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தை ஒருசிலர் தமது #அரசியல் சுயலாபத்திற்காகவும் , இந்திய துனைத்தூதரகத்திற்கு தமது விசுவாசத்தையும் காட்டவும் பயன்படுத்தி உள்ளார்கள் என தோன்றுகின்றது.
யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் எம்.ஜி.ஆரின் சிலைக்கு #மலர்மாலை அணிவித்த பின்னர் அவரை ஓராமாக விட்டுவிட்டு சிலர் சுயலாப நோக்குக்காக நிகழ்வினை கொண்டு நடாத்த தொடங்கினர்.
சுந்தரலிங்கத்தை விளக்கு ஏற்ற இறுதியாக அழைத்தனர். சுந்தரலிங்கம் என்பவர் தனது சொந்த நிதியில் வாங்கிய உடுபுடவைகளை அவரை ஓரம் கட்டி தாம் தமது சொந்த நிதியில் உதவி செய்வது போன்று ஊடகங்களுக்கு முன்னால் போஸ் கொடுக்க ஆரம்பித்தனர்.
இருந்த போதிலும் அங்கு நின்ற சில ஊடகவியலாளர்களே சுந்தரலிங்கம் என்பவரை ” ஐயா நீங்களும் சேர்ந்து கொடுங்கள்” என அழைத்து இருந்தனர். இதுவரை காலமும் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் நினைவு தின நிகழ்வுகளில் சுந்தரலிங்கம் அவர்கள் எம்.ஜி.ஆர் குறித்து சிற்றுரை ஒன்று ஆற்றி எம்.ஜி.ஆரின் பாடல்களை பாடுவார். ஆனால் இன்றைய தினம் சுந்தரலிங்கத்திற்கு அந்த வாய்ப்புக்கள் அனைத்தும் மறுக்கப்பட்டு இருந்தது.
இதுவரை காலமும் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் , பிறந்த தின நிகழ்வு நடைபெறுகையில் இன்றைய தினம் கலந்து கொண்ட புண்ணியவான்கள் எங்கே சென்று இருந்தார்கள் ? இனிவரும் காலத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆரின் பிறந்த தின , நினைவு தின நிகழ்வுகளில் ஆவது தமது சொந்த நிதியில் வறிய மக்களுக்கு உதவுவார்களா ? அல்லது சுந்தரலிங்கம் சுருட்டு சுற்றி , விவசாயம் செய்து சிறுக சிறுக சேர்ந்த பணத்தில் வறிய மக்களுக்கு வழங்க என உடுபுடவைகள் வாங்கி வர அதனை தமது சொந்த நிதியில் வழங்குவது போன்று இந்த புண்ணியவான்கள் உதவ போகின்றார்களா ? என்பதனை பொறுத்து இருந்து பார்ப்போம்.

                                                                                                         நன்றி: அதிரடி இணையம்
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)