வவுனியாவில் கொட்டும் மழையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Monday, January 23, 2017

வவுனியாவில் கொட்டும் மழையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது!!!

இன்று (23.01.2017) பிற்பகல் வேளையில் தொடரும் மழையினையும் பொருட்படுத்தாமல் காணாமற்போனோரின் உறவினர்கள் தொடர்ந்தும் தமது உண்ணாவிரதத்தினை தொடர்ந்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் மேற்கொண்டு வருகின்றனர்.
வுனியாவில் இன்று (23.01.2017) காலை 9.30மணியளவில் கையளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமற்போன உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (23.01.2017) காலை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஒன்றிணைந்த காணாமற்போன உறவுகள் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், பிரதான வீதிவழியாக ஊர்வலமாகச் சென்று, மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக தபால் நிலையத்திற்கு அருகில் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.


நன்றி: வவுனியா நெட்
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)