எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சாட்சியை தூண்டட்டும்!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Thursday, March 9, 2017

எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சாட்சியை தூண்டட்டும்!!!

எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சாட்சியை தூண்டட்டும்! - ஒப்பாரி வைத்து வவுனியாவில் போராட்டம் (Photos&Video)

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும், ‘தீர்வு கிடைக்கும் வரை (சுழற்சிமுறையிலான) உணவு தவிர்ப்பு’ போராட்டம் இன்று 10.03.2017 வெள்ளிக்கிழமை 15வது நாளாகவும் தொடர்கின்றது. 

இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள், சர்வதேச மகளிர் தினத்தில் (மார்ச் - 8, புதன்கிழமை) ஒப்பாரி வைத்து தமது கூட்டு மனவலிகளை ஒருமித்து வெளிப்படுத்தினர். 

‘பெண்கள் தாம் பெற்றுள்ள உரிமைகளுக்காக பெருமைப்படவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக போராட வேண்டி உறுதி ஏற்கவும் வேண்டிய சர்வதேச மகளிர் தினத்தில் கூட, தாங்கள் அநாதரவாக்கப்பட்டு வீதிகளில் விடப்பட்டுள்ளதாகவும், பெண் சமத்துவம் - மனித உரிமை பற்றி பேசும் அமைப்புகளும் பெண்ணிய செயல்பாட்டாளர்களும் ஒப்புக்காகவேனும் வாய்திறந்து இந்த மோசமான அடிப்படை உரிமை மீறல்கள் குறித்து எதுவும் பேசுவதில்லை என்றும்,

இந்த ஒப்பாரி போராட்டத்தின் மூலமாவது, தமது ஒருமித்த அழுகுரல்கள் சம்பந்தப்பட்டவர்களினதும், ஆட்சி - அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களினதும் மனச்சாட்சியை தூண்டட்டும் என்றும்’ காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்கள் தெரிவித்தனர். 

இதேவேளை நாளை 11.03.2016 சனிக்கிழமை, வவுனியாவில் வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)