காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Sunday, March 12, 2017

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்! (Photos)

சிறீலங்கா அரசின் யுத்தக்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களை விசாரணை செய்வதற்கு, ஐ.நா மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளிக்கும் கடப்பாட்டினை தொடர்ந்தும் உதாசீனம் செய்துவரும் சிறீலங்கா அரசுக்கு, இம்முறையும் ஜெனிவாவில் இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும், ‘தீர்வு கிடைக்கும் வரை (சுழற்சிமுறையிலான) உணவு தவிர்ப்பு’ போராட்டம் இன்று 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை 17வது நாளாகவும் தொடர்கின்றது. 

இந்தநிலையில் நேற்று 11.03.2017 சனிக்கிழமை, வவுனியாவில் வன்னி இன் விருந்தினர் விடுதியில் ஒன்றுகூடிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், ‘சிறீலங்கா அரசுக்கு இம்முறையும் ஜெனிவாவில் இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

யுத்தக்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களை, சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்குத்தொடுநர்கள் உடனான கலப்பு நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உடன்படாமல் முரண்டுபிடித்துவரும் சிறீலங்கா அரசை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தாமல், 

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி வழங்கும் சட்ட ஒழுங்குகளிலிருந்து தவறிழைத்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்களால் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

ஏ9 சாலை ஓரமாக உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில், கறுப்புக்கொடிகளை பறக்க விட்டுள்ளதால், போராட்ட களச்சூழல் முழுவதும் கறுப்புக்களமாக மாறியுள்ளது. 


TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)