கனடா பூராகவும் பலத்த மழை!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Saturday, May 6, 2017

கனடா பூராகவும் பலத்த மழை!!!

கனடாவில் உள்ள  மத்திய பகுதியான கியுபெக், ரொறொன்ரோ போன்ற பல பகுதிகளில் விடாமல் பெய்த கனத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரிகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
வெள்ளம் கரை புரண்டோடுவதால் வீடுகள் சேதமடையலாம் என்ற கவலை வீட்டு குடியிருப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கியுபெக்கில் வெள்ளத்தை சமாளிக்க இராணுவ உதவி கோரப்பட்டுள்ளது. கடந்த 55-வருடங்களாக கியுபெக்கில் இத்தகைய நிலைமை காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியுபெக்கில் நிலைமை மிக மோசமானதாக உள்ளதென அறியப்படுகின்றது.
130-ற்கும் மேற்பட்ட சமூகங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 700-பேர்கள் வரை தங்கள் வீடுகளை கைவிட வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.
ரொறொன்ரோ வூட்பைன் பீச் வூட்பைன் ஏரியாக காட்சியளிக்கின்றது.
வழக்கமான பருவகால மழை வீழ்ச்சியை விட இரட்டிப்பு முதல் மும்மடங்கு மழை பெய்துள்ளதுடன் பாரிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியதாக கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது.
மொன்றியலில் லெ மெசியர் என்ற பகுதி தற்சமயம் நீருக்குள் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒட்டாவாவிற்கு அருகாமையில் Gatineau 379 குடியிருப்பாளர்கள் தாங்களாகவே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் 309-பேர்களிற்கு செஞ்சிலுவை சங்கம் உதவியுள்ளது.
மத்திய அரசாங்கம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு தேவையான உதவிகளை செய்யும் என பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நியு பிரவுன்ஸ்விக்கில் 100-மில்லி மீற்றர்கள் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நோவ ஸ்கோசியா மற்றும் லப்ரடோர் பகுதிகளில் 25 முதல் 50 மில்லி மீற்றர்கள் மழை பெய்யும் என அறியப்படுகின்றது.
monmont2nightnight-qnight-beanight-wnight-w1waerwater1water2

night-b1

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)