யாழில் மது போதையில் உலாவும் இளைஞர்கள்!!! - Yazhpanam
add_action('switch_theme', 'mytheme_setup_options'); function mytheme_setup_options () { delete_option('_enable_features'); delete_option('_enable_catalog'); } -->

திங்கள், 8 மே, 2017

யாழில் மது போதையில் உலாவும் இளைஞர்கள்!!!

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் 06.05.2017 மாலை இடம்பெற்றுள்ளதுடன், இளவாலை பொலிஸ் உத்தியோகத்தரே இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுழிபுரம் பனிப்புலத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் ஜஸ்டின் மற்றும் திருநாவுக்கரசு கரன் எனும் 17 வயதான இருவரும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்று விட்டு மது போதையில் வந்துள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர்கள் முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிரே சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளனர்.


இதன்போது நால்வரும் படுகாயமடைந்த நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மற்றைய மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கஞ்சா பாவிக்கும் காவாலிகளின் மோட்டார் சைக்கிளால் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

யாழ்ப்பாணம் வடலியடைப்பு பகுதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் பலியாகியுள்ளார்.கஞ்சா பாவிக்கும் பண்டத்தரிப்பு பனிப்புலத்தினை சேரந்த ஈ. ஜெஸ்ரின் என்னும் 17 வயது காவாலியான இவனுக்கு இன்று பிறந்த நாள் தி.கரன் என்னும் 17 வயதான காவாலியுடன் மது அருந்திவிட்டு சித்தன்கேணி சந்தியில் கையினை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிள் செலுத்தி வித்தை காட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவிகளை மோட்டார் சைக்கிளில் அச்சுறுத்தியபடி பண்டத்தரிப்பை நோக்கி மிகவேகமாக மோட்டார் சைக்களை செலுத்தும்போது வடலியடைப்பிலுள்ள வளைவினில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பொலிசாரின் மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது. அதில் படுகாயமடைந்த நால்வரும் யாழ் வைத்தியசாலையில் அனுமதித்தபோது அங்கு துரைராஜசிங்கம் உயிரிழந்தார். இவர் திருமண விடயம் தொடர்பாக வீடடிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

NP BAL 7192 என்னும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிளிலேயே தலைக்கவசமோ வேறு ஆவணங்களோ இன்றி மதுபோதையில் சென்றுள்ளனர்.

இது சுள்ளான் எனப்படும் காவாலியான காந்தரூபனுடையது. இதே போன்றே சித்தன்கேணி ,பண்டத்தரிப்பு ,சங்கானைப்பகுயில் காவாலிகளின் அட்டகாசம் தினமும் இடம்பெறுவதாகவும் தமது பிள்ளைகளை கல்விகற்பதற்கு அனுப்புவதற்கு அச்சமடைவதாகவும் மக்கள் தெரிவக்கின்றனர்.

பொலிசாருக்கே இந்த நிலையென்றால் சாதாரண பொதுமக்கள் எவ்வாறு வீதயில் செல்வது எனவும் தெரிவித்துள்ளனர் .இந்த மூன்று காவாலிகளுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவமானது யாழில் பொலிசாரின் செயல்திறனின்மைக்கு நல்ல எடுத்துக்காட்டு எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
" });

யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net

அறிவித்தல்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *


Tech News

Latest