பிரான்சின் புதிய ஜனாதிபதியாக இமானுவேல் மக்ரோங், தெரிவு!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Monday, May 8, 2017

பிரான்சின் புதிய ஜனாதிபதியாக இமானுவேல் மக்ரோங், தெரிவு!!!

பிரான்ஸ் அரசியல் வரலாற்றில் மிகவும் பிரபலமற்ற ஒரு அரசில் உறுப்பினராக இருந்த இம்மானுவேல் மேக்ரோன் உலக நாடுகளே திரும்பி பார்க்கும் அளவில் வெற்றி பெற்றதன் ரகசியத்தை அரசியல் ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
39 வயதாகும் இம்மானுவேல் மேக்ரோன் பிரான்ஸ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றிக்கு பின்னால் அவரது கடின உழைப்பு இருந்திருந்தாலும் கண்டிப்பாக அதிர்ஷ்டமும் அவரை கைவிடவில்லை.
அதிர்ஷ்டசாலி மேக்ரோன்
தேர்தலின் துவக்க நாட்களில் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கடும் போட்டியாளராக திகழ்ந்த வேட்பாளர்களில் ஒருவரான François Fillon ஊழல் குற்றச்சாட்டு காரணமாக போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இது ஜனாதிபதி வேட்பாளரான மேக்ரோனுக்கு சாதகமாக அமைந்தது.
புத்திசாலித்தனமான முடிவு
மக்களின் ஆதரவு இன்றி எந்த அரசியல் கட்சியும் தேர்தல்களில் வென்றது இல்லை என்ற சூத்திரத்தை தெரிந்து வைத்துக் கொண்ட மேக்ரோன் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மக்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் அறப்போராட்டம் ஒன்றை அறிவித்தார். அதன் அடுத்த நான்கு மாதத்தில் ஜனாதிபதி François Hollande அரசில் இருந்து விலகினார்.
புதுமையை புகுத்திய மேக்ரோன்
மக்களுக்காக உருவாக்கப்பட்ட தனது En Marche அமைப்பினை முன்னெடுத்து செல்ல முடிவு செய்த மேக்ரோன், உடனடியாக 2008 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மேற்கொண்ட உத்திகளை பரிசீலனை செய்தார். இதற்கென ஒபாமாவுடன் தேர்தல் காலங்களில் இணைந்து செயல்பட்ட அரசியல் சார்ந்த நிறுவனத்தின் உதவியுடன் தேர்தலை எதிர்கொண்டார்.
இந்த பிரத்யேக குழுவானது பிரான்ஸ் முழுமையும் 300,000 கதவுகளை தட்டி மேக்ரோன் ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தியது.
நேர்மறை கருத்துக்களுக்கு முன்னுரிமை
இம்மானுவேல் மேக்ரோனின் அதிரடி அரசியல் நகர்வுகள் அனைத்தும் எதிர்கட்சிகளை கடுமையாக பாதித்தது. ஜனாதிபதி தேர்தலில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான மரைன் பென் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆனால் மேக்ரோன் அவை அனைத்தையும் நேர்மறை கருத்துக்களுடன் எதிர்கொண்டார். நம்பிக்கையற்ற மனநிலையில் உழன்ற பிரான்ஸ் மக்களிடையே இம்மானுவேல் மேக்ரோன் மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும், நேர்மறை கருத்துகளுடனும் தோன்றினார். அது மக்களிடையே புது தாக்கத்தை ஏற்படுத்தியது.
மரைன் பென்னுக்கு எதிரானவர்
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் களம் முழுமையும் மரைன் லீ பென் எதிர்மறை கருத்துக்களை மட்டுமே பரப்பி வந்தது மேக்ரோனுக்கு சாதகமாக அமைந்தது. எதிர்காலம் மீது மிகுந்த ஆவலுடனும் கவலையுடனும் இருந்த பிரான்ஸ் மக்களிடையே மேக்ரோனின் பேச்சு புது வெள்ளம் பாச்சியது.
இதுவே மேக்ரோனை பிரான்ஸ் மக்கள் தெரிவு செய்ய தூண்டியது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மரைன் பென் மிகவும் சக்தி வாய்ந்த பிரசாரத்தை மேற்கொண்டார். ஆனால் அவரது ஆதரவு மேக்ரோன் தாக்கத்தால் நாளுக்கு நாள் சரிந்து வந்தது.
கடந்த ஆண்டு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 30 சதவிகித ஆதரவுடன் சரிசமமாக இருந்த மரைன் பென் அடுத்த சில வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் இரண்டு முறை இம்மானுவேல் மேக்ரோனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 வயது மூத்த பெண்ணை மணந்த பிரான்ஸ் புதிய ஜனாதிபதி – காதல் லீலைகள் அம்பலம்

பிரான்சின் புதிய ஜனாதிபதியாக லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மேக்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மேக்ரான், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி தலைவர் லீ பென்னை வீழ்த்தியுள்ளார்.
இதில் மேக்ரான் 65.8 சதவீத வாக்குகளும், மரின் லீ பென் 34.2 சதவீத வாக்குகளும் பெற்றனர். 39 வயதான மேக்ரான் பிரான்ஸ் ஜனாதிபதி வரலாற்றில் குறைந்த வயதில் ஜனாதிபதி ஆனவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதியான மேக்ரான் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. மேக்ரான் மனைவி பெயர் Brigitte Trogneux. இவர் மேக்ரானை விட 24 வயது மூத்தவர்.
Brigitte Trogneux நாடக ஆசிரியரான இவர் 1953-ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள amiens-ல் பிறந்துள்ளார். 1992-ஆம் ஆண்டு இம்மானுவேல் மேக்ரான் Brigitte Trogneux-ஐ ஒரு தனியார் பள்ளியில் சந்தித்துள்ளார்.
Trogneux-க்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். Trogneux-ன் மூத்த மகளும், இம்மானு வேல் மேக்ரானும் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர்.
Trogneux ஒரு நாடக ஆசிரியர் என்பதால், நாடக வகுப்பில் மேக்ரான் சேர்ந்துள்ளார். இதனால் இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கு மேக்ரானின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மேக்ரானை பாரிசில் உள்ள பள்ளியில் படிப்பதற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருந்த போதிலும் இருவரும் போனில் பேசியபடி இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் Trogneux தனது கணவரை விட்டு பிரிந்து பாரிசிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் இருவரும் பல தடைகளை கடந்து 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். மூன்று குழந்தைகளுக்கு வளர்ப்பு தந்தையானார் மேக்ரான்.
மேக்ரான் தன்னை விடவும் 24 வயது மூத்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளதுடன், தற்போது குறைந்த வயதுடைய ஜனாதிபதியாக பொறுப்பேற்று பிரான்ஸ் அரசியல் வரலாற்றில் புதிய தடம் பதித்துள்ளார்.
இதே வேளையில் இவருடைய ஆட்சியில் தன்னுடைய மனைவியான Trogneux-க்கு கல்வி அமைச்சர் பதவியை அவர் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)