காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 15, 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் திருகோணமலையில்(15.Jun.2017) கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
(புகைப்படம்:Batti Natham)


திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடலில் இறங்கி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் 100 நாட்களை எட்டியுள்ளது.
இந்நிலையில் தங்களின் கோரிக்கைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிட்டவில்லை என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)