கூட்டமைப்பினருக்கு புத்திமதி சொன்ன ஐ.நாவின் உதவிச் செயலாளர்- உங்களுக்குள் ஒற்றுமை முக்கியம்!!! - Yazhpanam

சனி, 22 ஜூலை, 2017

கூட்டமைப்பினருக்கு புத்திமதி சொன்ன ஐ.நாவின் உதவிச் செயலாளர்- உங்களுக்குள் ஒற்றுமை முக்கியம்!!!

வடக்கு மாகாண சபையில் நடந்த விடயங்களை அறிந்திருக்கின்றோம். என்றும் உங்களின் ஒற்றுமை முக்கியம். நீங்கள் ஒற்றுமையாகத் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்று ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் அறிவுரை கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலருக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“நீங்கள் குறிப்பிட்ட விடயங்களை நாங்கள் அறிந்து வைத்திருக்கின்றோம். நாங்கள் நிச்சயமாக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். ஐ.நா. பொதுச் செயலரிடம் உங்களின் ஆதங்கங்களை எடுத்துரைப்பேன். ஐ.நா. உங்கள் விடயத்தில் அக்கறையாக இருக்கின்றது. வடக்கு மாகாண சபையில் நடந்த விடயங்கள் எங்களுக்குத் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை மிக முக்கியம். நீங்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாக வேலை செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
" });

Banking News

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Post Top

Your Ad Spot