சுவிஸ்குமாரை அனுப்பிவைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கூறினாராம்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, July 19, 2017

சுவிஸ்குமாரை அனுப்பிவைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கூறினாராம்!!!

வித்தியா பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லக்ஸ்மன் வீரசேகர சாட்சியம்
சுவிஸ்­கு­மாரை கைது­செய்து வந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் சிறி­க­ஜ­னிடம் அவரை யாழ்.பொலிஸ் நிலை­யத்தில் முற்­ப­டுத்­து­மாறு நான் கூறி­ய­போது, இந்த நப­ருக்கு எதிராக சாட்­சி­யங்கள் எதுவும் இல்லை. அவ்­வாறு  சாட்­சி­யங்கள் இல்­லாத நிலையில் அவரை சந்­தே­கத்தின் அடிப்­ப­டை­யிலும் கூட பொலிஸ்  
நிலை­யத்தில் முற்­ப­டுத்த முடி­யாது என்று உப பொலிஸ் பரி­சோ­தகர்
சிறி­கஜன் என்­னிடம் கூறினார் என்று புங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கின் 31 ஆவது சாட்­சி­யான ஓய்­வு­பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் லக்ஸ்மன் வீர­சே­கர ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் சாட்­சி­ம­ளித்தார்.
பின்னர் இது­தொ­டர்­பாக நான் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ருடன் பேசி­ய­போது சுவிஸ் நாட்டைச் சேர்ந்­த­வ­ருக்கு காயங்கள் ஏதும் இருக்­கு­மானால் அது தொடர்­பாக விரி­வான வாக்­கு­மூலம் பெற்று அவரை அனுப்பி வைக்­கு­மாறு தன்­னிடம் வட­மா­காண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜய­சிங்க கூறி­ய­தாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா என்­னிடம் கூறினார்.
மேலும் 2015.05.19 அன்று புங்­கு­டு­தீவில் இடம்­பெற்ற கூட்­டத்தில் சுவிஸ்­கு­மாரை விடு­வித்து விட்­ட­தாக மக்கள் சத்­த­மிட்­ட­போது அவ­ருக்கு எதி­ராக சாட்­சி­யங்கள் இல்லை எனவும் அதனை நீங்கள் வழங்­கினால் அவரை மீண்டும் கைது­செய்­யலாம் என வட­மா­காண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜய­சிங்க கூறினார். இதன் போது அங்­கி­ருந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மகேஸ்­வ­ரனின் சகோ­தரன் என அறி­யப்­பட்ட ஒருவர், தாம் சாட்­சியம் வழங்­கு­வ­தாக கூறி­யி­ருந்தார் எனவும் ஓய்­வு­பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் லக்ஸ்மன் வீர­சே­கர தெரிவித்தார்.
 புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கூட்டுப் பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ்­மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மை­யி­லான அன்­ன­லிங்கம் பிரே­ம­சங்கர், மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகியோர் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.
நேற்­றைய விசா­ர­ணையில் ஏழா­வது நாளாக சாட்சிப் பதி­விற்­காக மன்று கூடி­யி­ருந்­த­போது இவ் வழக்கில் 31 ஆவது சாட்­சியின் பதி­வுகள் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. இச் சாட்சியத்தை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்துடனும் ஏனைய அரச சட்டவாதிகள் குழுவினருடன் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணம் நெறிப்படுப்படுத்தினார்.

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)