யாழ். துன்னாலையில் தொடரும் பதற்றம்!!! - Yazhpanam
add_action('switch_theme', 'mytheme_setup_options'); function mytheme_setup_options () { delete_option('_enable_features'); delete_option('_enable_catalog'); } -->

திங்கள், 10 ஜூலை, 2017

யாழ். துன்னாலையில் தொடரும் பதற்றம்!!!

யாழ். துன்னாலை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை நீடித்துள்ளமையை அடுத்து அங்கு விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட யாரும் பிரவேசிக்க முடியாதுள்ளதாக யாழ்ப்பாணம் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன், விஷேட அதிரடிப்படையினரின் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்திருந்தார்.


இந்நிலையில், கலிகைச் சந்திக்கும், துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று காலை சாலையில் டயர்களைக் எரித்து பொது மக்கள் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியிருந்தனர்.
அத்துடன், குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்ததுடன், தற்போது வரையிலும் அந்த பகுதியில் அசாதாரண நிலை தொடர்ந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைத்தியசாலை வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் நாளை துன்னாலையில் இடம்பெறவுள்ளது.
இதனால் அந்த பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்ற காரணத்தினால் குறித்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிந்திய செய்தி:

வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலையை சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது இடுப்பு மேற்பட்ட வயிற்று நெஞ்சு பகுதியில் சூட்டுக்காயம் காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
“சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஹன்ரர் ரக வாகனம் மணலுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதன்பின்னரே முழுமையாக தகவல்களைத் தெரிவிக்க முடியும்.”-என்று பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் 10 நாள்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நேற்று மதியம் உணவு உண்டுவிட்டு யாழ்ப்பாணம் சென்றுவந்து மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்திய அவர் வல்லிபுரம் கோயிலுக்குச் சென்று வருகின்றேன் என்று கூறிச் சென்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் மீண்டும் வெளிநாடு செல்லவிருந்தார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தினர்.


மந்திகை மருத்துவமனைப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்து காங்கோசன் துறை மூத்த பொலிஸ் அத்தியட்சிகர் மகாசிங்க, காங்கேசன்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட 50 பொலிஸாரும் அவர்களுடன் இரு வாகனங்களில் சிறப்பு அதிரடி படையினரும் மந்திகை ஆதார மருத்துவனைக்குச் சென்றனர்.


அதேவேளை, அதேவேளை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல்லியடியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் முகத்தை துணியால் மூடிக் கட்டியவாறு தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது.


துன்னாலையில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஒன்றும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டது.
 சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிசார் மூவர் கைது செய்யப்பட்டு ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவன் மற்றும் முபாறக் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
" });

யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net

அறிவித்தல்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *


Tech News

Latest