கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் – வடமராட்சி கிழக்கில்!!! - Yazhpanam

சனி, 22 ஜூலை, 2017

கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் – வடமராட்சி கிழக்கில்!!!


யாழ்/வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில், நேற்று மாலை சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க முனைந்த கடலோரக் காவல்படையினர் தாக்குதலுக்குள்ளான நிலையில், அவர்கள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தை அடுத்து இன்று காலை தொடக்கம், அந்தப் பகுதியில் அதிகளவு கடற்படையினர் குவிக்கப்பட்டனர். வல்லிபுர வீதியின் இரு மருங்கிலும் 300க்கும் அதிகமான கடற்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அருகே 4 கடலோரக் காவற்படையினர் துவிச்சக்கர வண்டியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டடிருந்தனர். அவர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை மறித்து சோதனையிட முற்பட்டுள்ளனர். எனினும் அதில் பயணித்தவர்கள் காவற்படையினர் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் காவற்படையினர் இருவர் மீது அவர்கள் சவள்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் கடலோரக் காவற்படையினர் இருவர் படுகாயமடைந்தனர். சம்பவம் இடம்பெற்ற பகுதி மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு நேற்றிரவு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தையடுத்து காவற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மணல் கடத்திலில் ஈடுபட்டோர் வாகனத்துடன் தப்பித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு கடலோரக் காவற்படையினர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
அதனையடுத்து வடமராட்சிக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எஸ்.பி.மாரசிங்க, பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஆகியோர் தலைமையில் பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை, சம்பவத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரால் கடலோரக் காவற்படையினரின் துப்பாக்கி ஒன்று பறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் அதனை கடற்படையினர் மறுத்தனர்.
" });

Banking News

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Post Top

Your Ad Spot