60 ஆவது சுதந்திர ஆண்டில் மலேசியா!!! - Yazhpanam
add_action('switch_theme', 'mytheme_setup_options'); function mytheme_setup_options () { delete_option('_enable_features'); delete_option('_enable_catalog'); } -->

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

60 ஆவது சுதந்திர ஆண்டில் மலேசியா!!!கோலாலம்பூர், ஆக.31- மலேசியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று மெர்டேக்கா சதுக்கத்தில் சுதந்திர தினம் மிக கோலாகலமாக நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய அணிவகுப்பைக் காண பல்லாயிரக்கணக்கான மலேசியர்களும் சுற்றுப்பயணிகளும் இங்கு குழுமிருந்தனர்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் முன்னிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பங்கேற்க, நாட்டின் முக்கிய துறைகள் மற்றும் அடையாள அணிவகுப்புகள் மிக சிறப்பாக நடைபெற்றன.
இதனைக் காண, காலை 6 மணி முதலே பொதுமக்கள் மெர்டேக்கா சதுக்கத்தில் திரள தொடங்கினர். பலர் தங்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்திக் கொண்டும் தலையில்  மெர்டேக்கா வாசகங்கள் அடங்கிய மஞ்சள் வண்ண துணியை அணிந்து கொண்டும் தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.
இந்த தேசிய தின கொண்டாட்டம் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டாலும் நேரில் தேசிய தினத்தைக் கொண்டாடுவது என்றுமே இனிமையானது என மக்கள் கூறினர்.

                                                                       நன்றி: www.vanakkammalaysia.com/
" });

யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net

அறிவித்தல்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *


Tech News

Latest