கிளிநொச்சியில் 815 பேருக்கு நடந்த பயங்கரம்- அவதானம் மக்களே!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, August 16, 2017

கிளிநொச்சியில் 815 பேருக்கு நடந்த பயங்கரம்- அவதானம் மக்களே!!!

தயவு செய்து இந்தச் செய்தியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அவர்களை எச்சரியுங்கள் அன்பு வாசகர்களே!!!

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி  மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மொத்தம் 815 பேர் டெங்குகாய்ச்சலால் பீடிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 585 நோயாளர்கள் கிளிநொச்சி  மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் உள்ள  585 கிளிநொச்சி மாவட்ட நோயாளர்களில் அனேகமானோர் கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து டெங்குநோய் தொற்றிய நிலையில் கிளிநொச்சிக்கு வந்து சிகிச்சைபெற்றவர்களாவர். இவர்களுள் ஒருவர் டெங்குநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மேலும்  சராசரியாக நாளொன்றிற்கு   டெங்குநோய்த்தொற்றுக்கு ஆளாகிய நிலையில்   குறைந்தது 3 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குத்தினமும் வெளிமாவட்டங்களிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

இவ் நெருக்கடியான நிலையில் மாவட்டத்தின் மக்களைப் பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சி சுகாதாரப் பிரிவினர் சிறு செய்திக் குறிப்பு ஒன்றினையும் வெளியிடுள்ளனர்.

குறித்த செய்திக் குறிப்பில்,

புகையிரத நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், வைத்தியசாலைகள், உணவகங்கள் ஆகிய இடங்களை பொதுமக்கள்  பாவிக்கும்போது அவ்விடங்களில் டெங்கு நுளம்புகள் காணப்படுமாயின் அவை டெங்கினால் பாதிக்கப்பட்டநோயார்களின்  டெங்கு வைரஸ் கலந்த இரத்தத்தினை உறிஞ்சிக்கொள்ளலாம்.

இவ்வாறு  டெங்கு வைரஸின் தாக்கம்  காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களிடம் இருந்து  டெங்கு வைரஸ் கலந்த இரத்தத்தினைக் கிளிநொச்சியில் காணப்படும் டெங்கு நுளம்புகள் உறிஞ்சுமாயின், அந்த நுளம்புகளினால் கடிக்கப்படும் அனைவரும் டெங்குநோயாளிகளாக நேரிடும். இதனால் கிளிநொச்சி மாவட்டத்தினுள்ளே டெங்கு காட்டுத் தீ போல அதிதீவிரமாக பரவத்தொடங்கும்.

இந்த அபாய நிலையைக் கருத்தில் கொண்டு இன்றும் நாளையும் நாளை மறுதினமும் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்ட பொது இடங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொதுமக்கள் மற்றும் பொது      அமைப்புகள் தத்தமது பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்புகொண்டு இந்த உயிர்க்காப்புப் பணியில் ஈடுபட முன்வருமாறு வேண்டுகிறோம் என அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)