தமிழ்த் தம்பதிகளே- தென்னம்பிள்ளை, மரங்களை நடுங்கள்: சுவாரசியம் - Yazhpanam

புதன், 2 ஆகஸ்ட், 2017

தமிழ்த் தம்பதிகளே- தென்னம்பிள்ளை, மரங்களை நடுங்கள்: சுவாரசியம்

தமிழ்த் தம்பதிகளே!! முதலிரவு நடாத்தும் முன் தென்னம்பிள்ளை நடுங்கள்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை அறுகுவெளிக்குப் போய்விட்டு யாழ்ப்பாணம் திரும்பிப் போய் கொண்டிருந்த போது நாவற்குழிப் பகுதியில் உள்ள வாசிகசாலை ஆல மர நிழலில் இருந்து இரண்டு பெரிசுகள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வாசியசாலையில் பத்திரிகை பார்ப்பதற்காக நுளைந்தேன். அந்த பெரிசுகள் மிகவும் சுவாரசியமாக கதைத்துக் கொண்டிருந்தபடியால் பத்திரிகை பார்ப்பதை விடுத்து அவர்களின் கதைக்குள் காதைச் சொருகினேன்.


ஒரு பெரிசு இன்னொரு பெரிசிடம் வெற்றிலை, பாக்கு கேட்டுக் கொண்டிருந்தார்.   மற்ற பெரிசு அந்த வெற்றிலையை கொடுத்து விட்டு ”டேய் நானும் நீயும் ஒன்டா படிச்சனாங்கள். எனக்கு முந்தி நீ கலியாணம் கட்டி பிள்ளையும் பெத்தனி. எனக்கு 5 பிள்ளை. என்னை விட உனக்கு ஒரு பிள்ளை கூட இருக்கு. அப்பிடி இருந்தும் என்னட்ட போய் வெத்திலை வாங்கிச் சாப்பிடிறியே.... அப்ப நான் பணக்காறன் என்டதை ஒத்துக் கொள்ளுறியோ” என பெரிசு மற்றவரிடம் கதை விட்டார்.
வெற்றிலை வாங்கிய பெரிசு கூறினார் ” அதுக்கு என்னப்பா செய்யிறது. பெத்ததுகள் எல்லாம் அம்போ என்டு விட்டுட்டு போட்டுதுகள். அதால தான் இப்பிடி இருக்குது. ஆனால் நீ பெத்ததுகளும் உன்னை அம்போ என்டுதானே விட்டுட்டு போட்டுதுகள். உன்னட்ட எப்பிடி காசு புளங்குது” என்று கேட்டார் பெரிசு.
அதுக்கு வெற்றிலை கொடுத்த பெரிசு சொன்ன பதில் இதுதான்.
”நான் மனிசியோட படுக்க போறதுக்கு முதல் அண்டைக்கு பின்னேரம் தென்னம்பிள்ளை நாற்று மேடையில இருந்து ஒரு தென்னம்பிள்ளையை எடுத்து பொருத்தமான இடத்தில வைச்சிட்டுத்தான் படுக்கிறனான். ஒரு மாதத்தில இப்பிடி 7,8 தென்னம்பிள்ளை வைச்சிடுவன். அவளோட படுத்து பெத்த பிள்ளைகளை விட அவளோட படுக்கேக்கு முன்னம் வைச்ச தென்னம்பிள்ளைகள் தான் இப்ப எனக்கு கை கொடுக்குது. ஒரு தேங்காய்க்கு சுளையா 50 ரூபா தந்துட்டு ஏறி பறிச்சுக் கொண்டு போறாங்கள். 
கண்ணதாசன் சொன்னது பொய்யோஃஃஃஃ "பிள்ளையைப் பெத்தா கண்ணீரு... தென்னையைப் பெத்தா இளநீரு". நீயும் இப்பிடித்தான் செய்திருக்கோனும். உங்க பார் உதால ஃமோட்டச்சயிக்கில  கவட்டுக்குள்ள வைச்சுக் கொண்டு போற பொடி பெட்டைகள் எல்லாம் அப்பன், ஆத்தாவை பாக்குமென்டோ நினைக்கிறாய்””
 என்டு நக்கல் சிரிப்புடன் கூறினார்.

நான் பேப்பர் வாசிக்கிறதை விட்டுப் போட்டு தென்னம் நாற்று வாங்க போய்க் கொண்டு இருக்கிறன்....

நன்றி
முகப்புத்தகம்(NewJaffna)
" });

Banking News

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Post Top

Your Ad Spot