யாழ் போதனா வைத்தியசாலையை கூத்தாடிகளின் கூடாரமாக்கிய பணிப்பாளர் சத்திய மூர்த்தி!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 10, 2017

யாழ் போதனா வைத்தியசாலையை கூத்தாடிகளின் கூடாரமாக்கிய பணிப்பாளர் சத்திய மூர்த்தி!!!

யாழ் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் படப்பிடிப்பு குழுவினர் சுமார் 30 பேரை 6 மனத்தியாலத்திற்கு மேலாக நோயாளர்களின் நலனின் மீது அக்கறை கொள்ளாது, சிகிச்சைக்கு இடையூறு விளைவிக்கும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கிய பணிப்பாளர் சத்திய மூர்த்தியின் செயல் மீது பொது மக்களும் வைத்தியசாலை ஊழியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். 
அவசர சிகிச்சை பிரிவு என்பது தீவிரமான நோய் நிலமையுடன் வரும் நோயாளியை உடனடியாகவும் மிகவும் வேகமாகவும் நோயை கண்டுபிடித்து காப்பாற்ற வைத்தியர்களும் தாதியினரும் பரபரப்பாகவும் நிதானத்துடனும் கடமை புரிகின்ற பிரிவு ஆகும் . இங்கு மூன்றாம் நபரின் இடையூறுகள் வைத்திய ஊழியர்களின் மனநிலையை திசை திருப்புவதோடு நோயாளியின் மனநிலையையையும் பாதிப்படைய செய்யும்


அவசர சிகிச்சை பிரிவினுள் தொற்றுக்கள் உட்ப்புகாதவாறு தடுக்க பாதணிகளை அகற்றுதல்,பார்வையாளர்களை அனுமதிக்காது தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகள் கடைப்பிடிக்க பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் எவ்வித சுகாதார அறிவும் இல்லாத 30 பேர் கொண்ட ஒரு கூட்டம் பாதணிகளுடனும் பொதிகளுடனும் படப்பிடிப்பு உபகாரணங்களுடனும் குறைந்தளவே இடவசதியுள்ள அவசர சிகிச்சை பிரிவினுள் அங்கும் இங்குமாக கூச்சலிட்டபடி திரிந்து நோயாளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்த அனுமதித்தது பணிப்பாளரின் முட்டாள் தனமான செயற்பாடுகளில் ஒன்றாகும்


அவசர சிகிச்சை பிரிவினுள் உறவுகளை அனுமதித்து விட்டு கனத்த நெஞ்சத்துடனும் பதட்டத்துடனும் நோயாளியின் உதவிக்காக நின்றவர்களை கூத்தாடிகளின் வேலையை பாதிப்பதாக கூறி வெளியே துரத்தியது மனிதாபிமானம் அற்ற கீழ்த்தரமான செயலாகும் .
இது பற்றி நியாயம் கேட்ட வைத்தியசாலை நோயாளர்களின் உறவினர்கள் இருவரை சர்வாதிகாரம் கொண்ட பணிப்பாளர் பொய்யான முறைப்பாட்டில் போலீசாரிடம் ஒப்படைத்தது அவரின் முட்டாள் தனத்தையும் .இவ் படப்பிடிப்பின் மீதான அவரது நாட்டத்தையும் தெளிவாக காட்டுகிறது


இதற்கு  பணிப்பாளர் வாங்கிய கையூட்டல் என்ன என்பது அவருக்கு தான் வெளிச்சம் பணிப்பாளரின் இவ்வாறான போக்கு காரணமாகவே இவர் பதவிக்கு வந்ததில் இருந்து வைத்திய சாலை ஊழியர்களின் போராட்டங்கள்,ஊழியர்கள், நோயாளிகளுக்கிடையிலான முறுகல்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றது.


வைத்திய சாலையில் நோயாளர்களுக்கு இரண்டாம் பட்ச்சமும் கூத்தாடிகளுக்கு முதலிடமும் கொடுத்த செயலானது நிர்வாக திறன் அற்ற சர்வாதிகார போக்கையே காட்டுகின்றது
இப் பணிப்பாளரினது செயல் ஆனது மக்களின் பார்வையில் போதனா வைத்திய சாலையின் மீதுள்ள நம்பிக்கையை மோசமடைய செய்து மக்களை தனியார் வைத்தியசாலையின் பக்கம் திசைதிருப்புவதாக அமைகிறது என வைத்திய சாலை சமூகம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)