கருணை, இரக்கம் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?- யாழ். மாநகர ஆணையாளரே!!! - Yazhpanam
add_action('switch_theme', 'mytheme_setup_options'); function mytheme_setup_options () { delete_option('_enable_features'); delete_option('_enable_catalog'); } -->

புதன், 16 ஆகஸ்ட், 2017

கருணை, இரக்கம் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?- யாழ். மாநகர ஆணையாளரே!!!


யாழ். மாநகர ஆணையாளரே...! கருணை, இரக்கம் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? காருண்யம் என்ன என்பதை நீங்கள் படித்து அறியவில்லையா?

ஒருநேர உணவுக்கு ஏழைகள் படுகின்ற அவலம் ஏசி அறையில் இருக்கும் நீங்கள் அறிந்ததுண்டா?
நல்லூரில் கச்சான் விற்கும் ஏழைகளிடம் தலா 50 ஆயிரம் ரூபாவில் இருந்து 80 ஆயிரம் ரூபா, ஒரு லட்சம் ரூபா வரை பணம் அறவிடுகின்றீர்களே... இது எந்த வகையில் நியாயம்?
ஆலயங்கள் சமூக மையங்களாக மாற வேண்டும் என்பது பொதுவான விதி. ஒரு ஊரில் உள்ள கஷ்டப்பட்ட மக்களை ஆலயங்கள் முன்னேற்ற வேண்டும். அதுவே சைவ சமயத்தின் அறநெறிப் பண்பாடு.
வறுமையுடன் போராடும் மக்களில் சிலரது வீடுகளில் அந்த ஊரில் இடம்பெறும் ஆலயத் திருவிழாக் காலங்களில்தான் மகிழ்ச்சி பொங்கும்.

ஆலயங்களில் கச்சான் விற்று அதில் கிடைக்கும் வருவாயில் அவர்கள் அகம் மகிழ்வார்கள். முன்னைய காலங்களில் மக்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.
ஆனால், இன்று எமது பிரதேசங்களில் உள்ள ஆலயங்களில் கச்சான் வியாபாரம் செய்பவர்களிடம் இருந்து ஆலய பரிபாலன சபைகள், பிரதேச சபைகள், நகர சபைகள் மாநகர சபைகள் போன்றன கருணையற்று பணம் வசூல் செய்கின்றன.

அதிலும் யாழ்.மாநகர சபை படு மோசமாகச் செயற்படுகின்றது. மனுநீதி என்றால் என்ன என்பதை அறியாதவர்கள் நிர்வாகத்தில் ஏறினால் இதைவிட இன்னும் மோசமாகவே நடக்கும்.
யாழ். மாநகர ஆணையாளரே...! வடக்கு மாகாண சபையின் உள்ளுராட்சி அமைச்சரே...! யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களை ஏன் அடக்கி ஆள்கிறீர்கள்?
ஏழைகள் இந்த மண்ணில் வாழத் தகுதி அற்றவர்களா? எதற்காக இப்படி அநியாயம் செய்கின்றீர்கள்..?
நன்றி:
NJ.Com
" });

யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net

அறிவித்தல்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *


Tech News

Latest