கிளிநொச்சியில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது டெங்கு!!! - Yazhpanam
add_action('switch_theme', 'mytheme_setup_options'); function mytheme_setup_options () { delete_option('_enable_features'); delete_option('_enable_catalog'); } -->

புதன், 30 ஆகஸ்ட், 2017

கிளிநொச்சியில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது டெங்கு!!!நாட்டின் தென்பகுதியை கிலிகொள்ள வைத்த உயிர்கொல்லி நோயான டெங்கு, வடக்கில் குறிப்பாக கிளிநொச்சியில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.

கிளிநொச்சியில் 203 பேருக்கு டெங்கு நோய் பீடிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் 200 மீற்றர்கள் இடைவெளிக்குள் மூன்று டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதையடுத்து, குறித்த பகுதி அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் இருவர் கொழும்பிலிருந்து காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிக்கு வந்து சிகிச்சை பெற்ற அதேவேளை, அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் ஒருவருக்கும் தற்போது டெங்கு நோய் தாக்கியுள்ளது.

இந்நிலையில், டெங்கு நோய் காவும் நுளம்புகள் மேலும் பரவி அப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு உயிராபத்தினை ஏற்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்பகுதியில் காணப்படும் டெங்கு நோய்க்காவி நுளம்புகளை அழிப்பதற்காக புகை விசிறப்பட்டு வருவதோடு, மக்கள் அமைப்புகள் ஊடாக விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, வீடுவீடாகச் சென்று நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டும் வருகின்றன.

இந்த விழிப்புணர்வு மற்றும் அபாயத் தவிர்ப்பு நடவடிக்கைகளில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவபீட மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இவ்வருடத்தில் இதுவரை 831 பொதுமக்கள் டெங்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில், 203 பேருக்கு டெங்குத் தொற்று காணப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

" });

யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net

அறிவித்தல்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *


Tech News

Latest