கலாக்காவின் ”மருமகன்” கலாக்காவுக்கு ஆப்பு!!! - Yazhpanam
add_action('switch_theme', 'mytheme_setup_options'); function mytheme_setup_options () { delete_option('_enable_features'); delete_option('_enable_catalog'); } -->

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

கலாக்காவின் ”மருமகன்” கலாக்காவுக்கு ஆப்பு!!!

புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதவி விலக வேண்டும் என அம்பாந்தோட்டை பாராளுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது ருவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் இவ்விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது..
சிறுவர் விவகார அமைச்சரே இது போன்ற கீழ்த்தரமான விடயங்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது.உடனடியாக பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.இந்நிலையில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை விஜயகலா மகேஜ்வரன் தானே காப்பாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

என அவரது குறிப்பில் பதியவிட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கில் பிரதான சந்தேக நபரான மகாலிங்கம் சசிக்குமார்(சுவிஸ் குமார்) மக்களால் பிடிக்கப்பட்ட போது வேலணை ஆலடி சந்திக்கருகில் மின்கம்பத்தில் கட்டப்பட்டவரை அமைச்சர் விஸயகலா கட்டுக்களை அகற்றி விடுவித்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இதே வேளை யாழ்ப்பாணத்தில் 2013ம் ஆண்டளவில் நாமல்ராஜபக்ச தொடர்பாக புகழ்ந்த விஜயகலா ”தமிழ்பெண் ஒருவரைத் திருமணம் செய்து நாமல் தமிழர்களின் மருமகனாக வேண்டும்” எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
" });

யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net

அறிவித்தல்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *


Tech News

Latest