ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்?.!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, September 22, 2017

ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்?.!!!

தமிழினத்துக்கு வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கு கடினமாக உழைத்து தமிழரை இன அழிப்பில் இருந்து பாதுகாப்போம் என்று கடைசி தேர்தலில் கூக்குரல் இட்டுவிட்டு மக்களின் வாக்குகளை பெற்றபின் ஊமைகளாகி போய்விட்டார்கள். இவர்கள் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் பயந்தவர்களா?

1.சர்வதேச விசாரணையை சுமந்திரன் வேண்டாம் என்றபோது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.
2.இரண்டு வருடம் இலங்கைக்கு கால அவகாசம் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கொடுக்க வேண்டும் என்று சுமந்திரன் சொன்னபோது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.
3.சிங்கள அமைச்சர்கள், தமிழர்கள் அரசியல் வழிகாட்டு குழுவில் இருந்தும் 
வடகிழக்கு இணைப்பையும், கூட்டாட்சி (சமஷ்டி) கேட்கவில்லை என்ற போது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.
4.ஒவ்வொரு எம். பி. க்கும் சிங்கள அரசாங்கம் 2 கோடி கார் இறக்குமதி உரிமத்துக்கு என்று கொடுத்த அந்த காசை மொத்தமாக (16x2) 32 கோடியை எடுத்து போரால் வாடும் தமிழர்களுக்கு தொழில் வாய்ப்புக்கு அல்லது உணவு வழங்குவதற்கு அல்லது சிறு குடிசை கட்டுவதற்கு பாவிக்காமல், அந்த 32 கோடியையும் பெற்றுக்கொண்டு ஏன் ஊமையாக்கினார்கள்
5.இராணுவத்தினை வடகிழக்கில் இருந்து எடுக்க வேண்டும் என்று கூறாமல் ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.
6.காணாமல் போகவர்களை எங்கே எனறு கண்டுபிடியாது ஏன் இவர்கள் ஊமையாகிப் போனார்கள்.
7.தமிழர்களின் நிலத்தினை மீட்பதற்கு போராடாமல் ஏன் இவர்கள் ஊமையாகிப் போனார்கள்.
8.சிங்களவர்கள் தமிழர் நிலத்தில் விகாரைகள் கட்டும் போது அதை எதிர்த்து அல்லது நீக்கும் வரை போராடாமல் ஏன் இவர்கள் ஊமையாகிப்போனார்கள்.
9.தமிழீழ எல்லைப்புறத்தில் சிங்கள முஸ்லீம் மக்கள் பலாக்காரமாக தமிழர் நிலங்களை பறித்து குடியேறும் போது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.
10.சுமந்திரன் வடகிழக்கு இணைப்பு இப்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது என்றபோது வடகிழக்கு இணைக்காமல் தமிழர்கள் தனிமைப்படுத்தி இன அழிப்புக்குள்ளாவார்கள் என்றும் வடகிழக்கு தமிழர்கள் பூர்வீகம் நிலம் என்று கூறாமல் இவர்கள் ஊமைகளாக ஏன் இருக்கின்றார்கள்?
11.வெளிநாடுகளில் பலர் எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்றும், சிங்கள இராணுவத்தை சிறையிட வழக்கு போட்ட போது எல்லா எம். பி. களும் அவர்களின் செயல்களுக்கு நன்றி சொல்லி அதனைப் பெரிது படுத்தாமல் ஏன் ஊமைகளாக இருந்தார்கள்.
12.70 ஆண்டுகளாக சிங்களவர்களால் ஏமாந்த தமிழ் இனத்துக்கு வெளிநாட்டு சக்திகளான அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவைதான் எனிமேல் உதவி செய்ய வேண்டும். அல்லாவிடில் தமிழ் இனம் அழிக்கப்பட்டு விடும். 
ஆனால் சுமந்திரன் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில், தான் வெளிநாடுகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவி கேட்டால், தன்னைப்பற்றிய சிங்களவர்களின் பார்வை குறைந்துவிடும் என்று கூறியதன் மூலம் தமிழினத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்த சுமந்திரனை ஏன் இந்த தமிழ் எம்.பி. க்கள் கட்சியினை விட்டு அகற்றாமல் ஊமைகளாகினார்கள்?
13.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் ஆலோசனைகளை ஜனநாயகமாக எல்லோரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று கேளாது ஏன் இவர்கள் ஊமைகளாக போனார்கள்
14.கிழக்கு தமிழர்கள் பற்றியும், அங்கு தமிழ் மாகாண ஆட்சியையும் புறக்கணித்த சம்பவத்தினை கேள்வி கேட்காமல் ஏன் இவர்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.
15.சம்பந்தன், சுமந்திரன் எடுக்கும் முடிவுக்கெல்லாம் இவர்களின் முடிவு, தமிழருக்கு என்ன தீங்கு செய்யும் என்று கேட்காமல் ஏன் இவர்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.
இவர்கள் ஒன்றில் சிங்களவர்கள் கொடுக்கும் சலுகைகளை எல்லாம் அனுபவித்துக்கொண்டு மௌனமாய் இருப்பதுதான் நன்மை என்றும், இல்லாவிட்டால் சலுகைகளை இழந்து விடுவார்கள் என்ற பயமோ?
போதிய கல்வி அறிவோ அல்லது உள்ளூர், சர்வசே அரசியல் அறிவு போதிய அளவு இல்லாமையின் காரணங்கள் இவர்களை ஊமைகள் ஆக்கியதோ?
இல்லாவிட்டால் சம்பந்தனைக் கேள்வி கேட்டால் அல்லது அவரை மீறிக் கதைத்தால் அடுத்த முறை எம்.பி. பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்று இவர்களை ஊமைகள் ஆகியுள்ளார்களோ?
தமிழர்கள் இந்த ஊமைகளை அரசியல் அந்தஸ்த்து கொடுக்காமல் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் தகுந்தவர்களுக்கு அரசியல் எதிர்காலத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
இவர்கள் கடமை தமிழர்களது உரிமைகளை பெற்றெடுப்பது. அதனை விடுத்து இவர்கள் மௌனமாக இருப்பது தமிழர்களுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம்.
நன்றி, 
புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஊடகம்.
செப்டெம்பர் 18, 2017

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)