இழுத்தடிப்புகள் தொடர்வதால் மாற்று வழிவகைகளை ஆராய்ந்து காத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் சமூகம் தயாராக வேண்டும் - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, September 22, 2017

இழுத்தடிப்புகள் தொடர்வதால் மாற்று வழிவகைகளை ஆராய்ந்து காத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் சமூகம் தயாராக வேண்டும்

வட அயர்லாந்திற்குரிய கேபினெட் அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் பிரித்தானியபாராளுமன்ற உறுப்பினருமான தெரேசா வில்லியர்ஸ் MP அவர்களை பிரித்தானிய தமிழர்பேரவை நடைபெறும் ஜெனீவா கூட்டத் தொடரிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கையின்வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களில் இருந்து விடுபடுவதற்கு காலஅட்டவணையின் அடிப்படையிலான அமுலாக்கள் திட்டம் ஒன்று  நா தீர்மானம் 30/1தொடர்பில் தேவைப்படுகின்றது என  நா.வில் முக்கிய ராஜதந்திரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரித்தனியா தமிழர் பேரவை இலங்கை அரசுக்கு எதிரான உலகளாவிய ராஜதந்திரநடவடிக்கைகளை 2009ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.முக்கியமாக . நா. மனித உரிமை கூட்டத்தொடர்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்து தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்து சர்வதேச நாடுகளுக்கு ஆதாரபூர்வமாக உண்மைகளைஎடுத்துரைப்பதுடன் சர்வதேச நாடுகளின் தலைவர்களுடனும் ராஜதந்திரிகளுடனும்ராஜதந்திர செயற்பாடுகள் மூலம் இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு உரிய நீதியை நிலை நாட்டுவதற்கும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
2009ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு ஆதரவாக .நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானம்தலைகீழாக மாற்றப்பட்டு இன்று இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும்தீர்மானமாக வலுப்பெற்றமைக்கு பிரித்தானிய தமிழர் பேரவையினரின் சர்வதேசநாடுகளுடன் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் முக்கிய காரணமாக உள்ளது.
கடந்த 2015 ம் ஆண்டு . நா மனித உரிமை சபையினால் இலங்கைக்கு எதிராககொண்டுவரப்பட்ட நான்காவது தீர்மானத்தில் குறிப்பிட்ட கால எல்லைக்குள் முக்கியமான 25விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேசநாடுகளையும் . நா. மனித உரிமை கழகத்தையும் பிரித்தானிய தமிழர் பேரவைகோரியிருந்தனர். எனினும் அக் கோரிக்கைகள் இலங்கை அரசினால் நிறைவேற்றப்படாதபொழுதும் மீண்டும் 2017ம் ஆண்டு மார்ச் மாதம்  நா சபையினால் இரண்டு வருட காலஅவகாசம் வழங்கப்பட்டது.

பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட உலகளாவிய தமிழ் அமைப்புகள் இவ் அவகாசம்தொடர்பாக கடும் அதிருப்தியினைத் தெரிவித்த பொழுதும் இலங்கையில் ஏற்படட அரசியல்மாற்றங்களை முன்னிறுத்தி . நா மனித உரிமை சபையினால் இக் கால அவகாசம்வழங்கப்பட்டது. இது தொடர்பில் நிலைமையை சீர்தூக்கி ஆராய்ந்த பிரித்தானிய தமிழர்பேரவை தன் சகோதர அமைப்புகளான USTPAC மற்றும் CTC என்பனவுடன் இணைந்து 2017 மார்ச்மாத கூட்டத் தொடரில் . நா மனித உரிமை கழகத்திடமும் சர்வதேச நாடுகளிடமும் மூன்றுகோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள்.

      I.            2015ஆம் ஆண்டு தீர்மானத்திலுள்ள அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றதெளிவான ஒரு கால அட்டவணையுடன் கூடிய செயல்திட்டமொன்றினை முன்வைத்துஸ்ரீலங்கா அரசு இத் தீர்மானத்தினை முழுமையாக அமுலாக்க வேண்டும்.


      II.           மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  அலுவலகம் இலங்கையின் வடக்கு கிழக்கில் திறக்கப்பட வேண்டும்.


    III.           இலங்கையின் செயற்பாடுகள் குறித்து குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நா மனித உரிமை சபையினால் அறிக்கை வெளியிடுதல் வேண்டும்.

இதன் பலனாக இம்மாதம் நடைபெற்ற  நாடுகள் மனித உரிமை மாநாட்டில் இலங்கைதொடர்பான அம்சங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லாத பொழுதும் இலங்கை தொடர்பில்  நாமனித உரிமை ஆணையாளர் Zeid Ra’ad al Hussein அவர்கள் இலங்கை மேற்கொள்ள வேண்டியசெயற்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இலங்கை அரசு, தெளிவான காலஅட்டவணையொன்றுடன் கூடிய செயல்திட்டமொன்றினை (Timeline and Benchmark) முன்வைத்துநிலைமாறு கால நீதி பொறிமுறைகளை (Transitional Justice Mechanisms) உருவாக்கும் தீர்மானத்தில்(30/1) குறிப்பிட்ட கடப்பாடுகளையும் ஏனைய வாக்குறுதிகளையும் செயல்படுத்தவேண்டுமென அவ் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.  
 இலங்கை ஒரு போதும் இத் தீர்மானம் தொடர்பில் திருப்திகரமான எதுவிதநடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதில்லை என்பதை சுட்டிக்காட்டி இலங்கை அரசுஉடனடியாக இத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு கடும் அழுத்தத்தைகொடுக்க வேண்டும் என்ற கோரிகையினை முன்வைத்து. இலங்கை அரசு இத் திட்டங்களைநிறைவேற்ற தவறுவதால் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராக எடுக்க வேண்டிய எதிர்காலநடவடிக்கைகள் குறித்தும் பிரித்தானிய தமிழர் பேரவையினர் கலந்துரையாடி வருகின்றனர்.
 இது தொடர்பாக சர்வதேச நாட்டுத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு வடஅயர்லாந்திற்குரிய கேபினெட் அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் பிரித்தானியபாராளுமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய தெரேசா வில்லியர்ஸ் MP அவர்களைபிரித்தானிய தமிழர் பேரவை ஜெனீவாவுக்கு இக் கூட்டத் தொடரிற்கு அழைத்துச் சென்றனர். .நா.  விரைந்து தமிழர்களுக்கான நீதியான செயற்திட்டங்களை. செயற்படுத்த வேண்டும்என்பதையும் தெரேசா வில்லியர்ஸ் MP வலியுறுத்தியுள்ளார்.
 சிறிலங்காவின் இழுத்தடிப்புகள் தொடர்வதால் மாற்று வழிவகைகளை ஆராய்ந்துகாத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் சமூகம் தயாராக வேண்டும் என்று கோரி வரும்பிரித்தானிய தமிழர் பேரவையின் தொடர்ச்சியான இராஜதந்திர நடவடிக்கையினால்சர்வதேசத்தின் நிர்ப்பந்தத்திற்கு இலங்கை அரசு ஆளாகியுள்ளது. 

 

             British Tamils Forum.


No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)