5 பேரின் உயிரைக் கொன்று சுவிஸ்லாந்துக்கு ஓடி தப்பிய கொலையாளிகள்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Saturday, October 28, 2017

5 பேரின் உயிரைக் கொன்று சுவிஸ்லாந்துக்கு ஓடி தப்பிய கொலையாளிகள்!!!

நம்பிக்கைத் துரோகத்தால் பல இராட்சியங்கள் வீழ்ந்த வரலாறு பல உண்டு. நம்ம இனமே நம்பிக்கைத் துரோகத்தாலேயே இந்த நிலையில் உள்ளது.  நம்பிக்கை வைத்துப் பழகும்  அயலவர்களும் அறிந்தவர்களும் நண்பர்களும் செய்த துரோகத்தால் தமிழ் இனம் முள்ளி வாய்கால் கொலைக்களம் வரை சென்று வந்த வரலாறு யாவரும் அறிந்ததே.கிட்டு உட்பட பலர் கப்பலுடன் கடலுகுள் தற்கொலை செய்ததும் நம்பிக்கைத் துரோகத்தாலும் காட்டிக் கொடுப்பாலுமே. அந்த கிட்டுவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட கிட்டு பூங்காவுக்கு சற்றுத் தொலைவில் வாழ்ந்து வந்த ரமணன் தனது மகனையும் அவனது குடும்பத்தையும் இன்னொரு நம்பிக்கைத் துரோகச் செயலால் இழந்த  சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.நகைப் பட்டறை வைத்து நகைகள் செய்யும் கிருசாந் தனது நண்பன் என நினைத்து ஒருவனுக்கு கொடுத்த பணத்தால் தற்போது அந்தக் குடும்பமே வேருடன் அழிக்கப்பட்டு விட்டது. கிருசாந்தனின் தந்தையான ரமணனும் கிருசாந்திடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய சிறி என்பவனது தந்தையும் தொழில் நண்பகள் எனவும் தெரியவருகின்றது.  கிருசாந்தனும் தொழில் ரீதியிலேயே தனது தந்தையின் நண்பனாக இருந்த மகனான சிநி நட்பாயிருந்தான் எனத் தெரியவருகின்றது.கிருசாந்தின் 3 சகோதரிகள் என அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள். 3 சகோதரிகளும் திருமணம் முடித்தவர்கள் என்பதும் அவர்களில் இருவர் புலம்பெயர் நாட்டில் வாழ்கின்றார்கள் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.


கிருசாந்தின் மனைவி சுனேந்திரா சாவகச்சேரி சொந்த இடமாக் கொண்டவர். 

கிருசாந்தும் சுனேந்திராவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அரியாலை மாம்பழம் சந்தியிலிருந்து அரியாலை செல்லும் வீதியில் ஒரு ஒழுங்கையில் இவர்கள் தனி வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இவர்கள் அப்பகுதியில் இருப்பவர்களுடன் எந்தவித முரண்பாடோ அல்லது தொடர்புகளோ இல்லாது அமைதியாக வாழ்ந்து வந்ததாக தெரியவருகின்றது. 

பிஞ்சுக் குழந்தைகளுடன் இவர்களைக் குடும்பமாக கருக்கியவர்கள் யார்...
நடந்தது என்ன?


கிருசாந்தின் போலி நண்பனான சிறி தனது தம்பியான சிவசங்கரை வெளிநாடு அனுப்புவதற்காக பணம் தேவைப்படுகின்றது. கடனாக பணம் யாரிடமாவது வாங்கித் தர முடியுமா? எனக் கேட்டுள்ளான். அதற்கு மறு்பபுத் தெரிவிக்காத கிருசாந்த தனது பணத்தையும் கொடுத்து வட்டிக்கு இன்னொருவனிடத்திலும் பணம் பெற்று  பகுதி பகுதியாக  ஒரு கோடி ரூபா அளவில் கொடுத்தாதாக தெரியவருகின்றது.
தனது நண்பன்தானே என நினைத்து பொறுப்பேதும் இல்லாமல் அவர்களிடம் இருந்து கொடுத்த கடனுக்காக காசோலை  எழுதி வாங்கி விட்டு ( சிறி பெயரில் பத்து லட்சம் காசோலையும் தம்பியார் சிவசங்கர் பெயரில் இன்னொரு காசோலையும் )குறித்த பணத்தை கிருசாந்த தனது நண்பனுக்கு கொடுத்துள்ளான்.

குறித்த பணத்தை பெற்ற சிவசங்கர் அந்தப் பணத்தில் தனது தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு தானும் தலைமறைவாகியுள்ளான்.

சிறி தன்னை ஏமாற்றிவிட்டான் என அறிந்த கிருசாந் சிறியின் தம்பியான சிவங்கரின் வீட்டுக்குச் சென்று சிவசங்கரின் மனைவியிடம் இது தொடர்பாக வினாவிய போது சிவசங்கரின் மனைவி மிகக் கேவலமாக சிவசங்கரை ஏசியதாக தெரியவருகின்றது.
‘காசை தராவிட்டால் நாங்கள் தற்கொலை செய்வோம் என்று கூறியபோது "நீங்கள் செத்தால்தான் நிம்மதி" என சிவசங்கரின் மனைவி கிருசாந்திற்கு கூறியுள்ளாள்.
இதனால் விரக்தியும் அதிர்ச்சியுமடைந்த கிருசாந் இது தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்க முற்பட்ட போது சிறியின் தம்பியாரின் பெயரிலேயே பெருமளவு பணம் வாங்கியதால் தம்பியார் சுவிஸ் ஓடித் தப்பிவிட்டதால் சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சிவசங்கரிடம் கொடுத்த முழுமையான பணத்தையும் பெற முடியாது போய் விட்டது.
இதனால் சிவசங்கருக்காக வேறு நபரிடம் இருந்து பெற்ற பணத்தையும் அதற்கான வட்டியையும் கட்டுவதற்கு கிருசாந்தால் முடியாமல் போய் விட்டது. 

கிருசாந்துக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர் அது தொடர்பாக கிருசாந்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது.
இதனால் கிருசாந் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றுள்ளர். இருப்பினும் அந்த முடிவை மாற்றி தனது நகைப்பட்டறையில் நகைகளை துாய்மையாக்கும் நச்சுப் பதார்த்ததை உண்டு கிருசாந் இரு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துள்ளார். 
 

கிருசாந் தற்கொலை செய்ததால் கிருசாந்தின் காதல் மனைவி சுனேந்திரா பெரும் விரக்தி நிலையில் இருந்துள்ளார்.

அத்துடன் கிருசாந்தின் குழந்தைகளான பிஞ்சுகளும் அப்பா தொடர்பாக தாயை தொடர்ந்து கேள்விகள் கேட்டு வந்ததால் சுனேந்திராவும் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்து கணவன் அருந்திய அதே விசத்தை அருந்தி குழந்தைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.குறித்த இளம் குடும்பத்தை பிஞ்சுகளுடன் கருக்கியுள்ளது கடன் வாங்கிய நம்பிக்கைத் துரோக நண்பனும் அவனது தம்பி குடும்பமும். தற்போது இவர்கள் சுவிஸ்லாந்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றார்கள்.
சிறி மற்றும் அவனது தம்பி சிவசங்கர் மற்றும் சிவசங்கரின் மனைவி சுகன்யா ஆகியோர் செய்த துரோகத் தனம் எழுத்தில் வடிக்க முடியாத கொடூரச் செயலாகும். ஒரு குடும்பத்தை கருக்கிய இப் பாவிகளை கண்டால் தாங்கள் செய்த கொடூரச் செயல் என்ன என்பதை உணர்த்தும் வகையில் அவர்களுக்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 

தற்போது சிவசங்கர் சுவிசில் வாழ்ந்துவருகின்றார்.


காசு வாங்கிவிட்டு ஏமாற்றி சுவிஸ்லாந் ஓடிய சிவசங்கரும் அவனது மனைவி சுகன்யாவும்.


அவன் தொடர்பாக தகவல்கள் அங்குள்ள தமிழர்கள் அறிந்தால் அவனுக்கு தான் செய்த கொடூரம் என்ன என்பதை உணர்த்தும் வகையில் நடவக்கை எடுக்க வேண்டும்.
இல்லாது போனால் சுவிசிலும் அவன் பலரை இவ்வாறு கொலை செய்யத் தயங்கமாட்டான். 

யாழ்ப்பாணம் உட்பட தற்போது வடக்கு கிழக்குப் பகுதிகளில் இவ்வாறான துரோகத்தனங்களும் ஏமாற்றும் செயற்பாடுகளும் ஏராளமாக நடந்தேறி வருகின்றது.அத்துடன் கந்துவட்டி அல்லது மீற்றர் வட்டி என பணம் பறிக்கும் நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன.

மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி விரையம் செய்துவிட்டு பின்னர் அதைக் கட்ட வழியில்லாது காசு கொடுத்தவனைக் கண்டால் பயந்து திரிகின்றவர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள்.


குடாநாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)