Headlines News:
Home » » யாழ் இளைஞர் இந்தோனேசியாவில் இடம்பெற்ற விபத்தில் பலி!

யாழ் இளைஞர் இந்தோனேசியாவில் இடம்பெற்ற விபத்தில் பலி!

Editor By Yazhpanam on வியாழன், 19 அக்டோபர், 2017 | பிற்பகல் 1:55:00

அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தோனேசியாவில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – குருநகரைச் சேர்ந்த 36 வயதான ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் 1990 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
2010 ஆம் ஆண்டு முதல் வௌிநாடு செல்வதற்கு முயற்சித்து வந்துள்ளார்.
இந்நிலையில், படகின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டதனால் கைது செய்யப்பட்டு, இந்தோனேசியாவின் ஜகர்த்தா தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் (17) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் – மீசாலையைச் சேர்ந்த 32 வயதான இராஜேந்திரன் ரஜீவ் என்பவர் அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்றபோது கைது செய்யப்பட்டு, பப்புவா நியூகினியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது சடலம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

உங்கள் கருத்துக்கள் என்ன?
 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger