Headlines News:
Home » » ஓ ! உள்ளுராட்சி தேர்தல் வருகுது போல? சம்பந்தர் ஐயா வாயை திறந்து விட்டார். ! சொல்லிட்டார்!!!

ஓ ! உள்ளுராட்சி தேர்தல் வருகுது போல? சம்பந்தர் ஐயா வாயை திறந்து விட்டார். ! சொல்லிட்டார்!!!

Editor By Yazhpanam on வியாழன், 19 அக்டோபர், 2017 | பிற்பகல் 1:32:00

“பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக – எந்த தாமதமும் இன்றி சிறிலங்கா அரசாங்கம் விடுவிக்க வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறிவிட்டார்.
“ஏன் இத்தனை நாள் எதிர்க்கட்சி தலைவர் வாய் திறக்காமல் அமைதி ?”என எவரும் கேட்டு விடாதீர்கள். மக்கள் இடிக்க இடிக்க வெளியே வந்திருப்பதே மகிழ்ச்சி.
ஆனால் சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் 20 நாளாக போராடிய பிறகு தான் கோமாவில் இருந்து ஐயா விழித்து எழுந்து உள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணைக் கொண்டு வந்து உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

“பயங்கரவாத தடைச்சட்டத்தை கொடூரமானது அருவருப்பானது என்று சிறிலங்கா அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அந்தச் சட்டத்தின் கீழ், தமிழ் அரசியல் கைதிகளை சிறை வைத்திருப்பதில் என்ன நியாயம் உள்ளது?” என்று கேட்டிருக்கிறார்.
நல்ல வேளை போராடும் மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில் வாய் திறக்காமல் இப்படி திறந்திருக்கிறார். அவர் பிரேரணையில் இருந்து:
“சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு அனைத்துலக தர நியமங்களுக்கேற்ற புதிய சட்டத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
அந்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பெரும்பாலானவர்கள் சாதாரண நீதிமன்றத்தினால் கூட ஏற்றுக் கொள்ளமுடியாத ஒப்புதல் வாக்குதல் மூலத்தின் அடிப்படையில் தான் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஜேவிபி கிளர்ச்சியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது. அதுபோல தமிழ் அரசியல் கைதிகளும் ஏன் விடுவிக்கப்படக் கூடாது?
இந்த விவகாரத்துக்கு ஒரு அரசியல் பரிமாணம் உள்ளது. இவர்களின் விடுதலை, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு முக்கியமானது.
வவுனியாவில் இருந்து அனுராதபுரவுக்கு வழக்குகள் மாற்றப்பட்டமை முரண்பட்ட விடயமாகும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
தாமதமாக வந்தாலும் இப்பவாவது வாய் திறந்தமைக்கு மகிழலாம்.
அது சரி சனாதிபதி சட்டத்தரணியை யாராவது கண்டீர்களா? அவருக்கு பாதுகாப்புக்கு கூலிப்படை வேண்டும். மக்கள் கொடுத்த பதவியை வைத்து பிழைப்பவர்கள் சிறைக்கைதிகளுக்காக குரல் கொடுக்காமல் பதவியில் இருப்பதா?
யாரை எங்கே வைப்பது என்று தமிழ் மக்கள் இனியேனும் அறிந்து கொள்ள வேண்டும்.
Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

உங்கள் கருத்துக்கள் என்ன?
 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger