இவர்­கள் எங்கே ? இறுதி யுத்தத்தின் முக்கிய ஆதாரம்!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Saturday, October 21, 2017

இவர்­கள் எங்கே ? இறுதி யுத்தத்தின் முக்கிய ஆதாரம்!!!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இராணுவத்தில் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு - கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
100க்கும் மேற்பட்ட நாட்களாக இடம்பெற்று வரும் இந்த போராட்டத்திற்கு இது வரையிலும் தீர்வு கிடைக்கவில்லை.

இவர்களின் போராட்டம் தொடர்பில் தற்போது சர்வதேச ஊடகங்கள் பலவும் கவனம் செலுத்தியுள்ளன.
அண்மையில் ரொயிட்டர் செய்தி சேவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் குறித்து சிறப்பு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், பிரித்தானி ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளதுடன், அவர்களுக்கு என்ன ஆனது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு வெளியிட்டு வந்தது.

இந்நிலையில், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டு வான் பரப்பில் இருந்து வெடித்துச் சிதறும் புகைப்படம் ஒன்றையும் பிரான்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பிரான்சிஸ் ஹரிசன் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக, மேரி கொல்வின் அம்மையாருடன் இணைந்து வெள்ளை கொடி விவகாரம் தொடர்பில் பல்வேறு தகவல்களை திரட்டி வெளியிட்டிருந்தார்.
மேலும், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரான்சிஸ் ஹரிசன் ஐ.நா சபையிலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)