திருச்செந்துாரில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Wednesday, October 25, 2017

திருச்செந்துாரில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.!!!

தமிழ் நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்துாரில் சூரசம்ஹார விழா கோலாகலமாக(25) இடம்பெற்றது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 20ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. 
இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது.
சுவாமி, அம்பாள் தங்கசப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் சர்வ அலங்காரத்துடன் சம்ஹாரத்திற்கு ஆயத்தமானார். முன்னதாக மதியம் 2.30 மணிக்கு சிவன் கோயிலிலிருந்து சூரபத்மான் தனது படை பரிவாரங்களோடு புறப்பட்டு வீதி உலா வந்து கோயில் கடற்கரையை வந்தடைந்தான். மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் முதலில் யானை முகமான கஜமுக சூரனுடன் சுவாமி ஜெயந்திநாதர் போரிட்டார். சரியாக மாலை 5 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் தனது வேலால் கஜமுக சூரனை வீழத்தினார். 
பின்னர் சிங்கமாக மாறி சூரன் போரிடும் நிகழ்ச்சி நடந்தது. கருணை கடவுளான செந்திலாண்டவர் சிங்கமுக சூரனை  தனது வேலால் வதம் செய்தார். தொடர்ந்து சூரன் தனது சுயரூபத்துடன் சூரபத்மனாக மாறி போரிட்டான். சுவாமி ஜெயந்திநாதர் தனது வெற்றி வேலால் சூரபத்மனை வீழ்த்தினார். பின்னர் சேவலாகவும் மாமரமாவும் போரிட்ட சூரனை கருணை கடவுளான சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது திரண்டிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்திகோஷம் விண்ணை பிளந்தது. சூரனை வதம் செய்ததும் விரதமிருந்த பக்தர்கள் கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர்.சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.  விழாவையட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மகேந்திரன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)