Header Ads

speakermusicspeaker
Headlines News:
Home » » யாழ் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் தேவையற்றவர்க்கு பதாதைகளை வைக்கும் முட்டாள்த்தனமான கலாச்சாரம் !

யாழ் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் தேவையற்றவர்க்கு பதாதைகளை வைக்கும் முட்டாள்த்தனமான கலாச்சாரம் !

Editor By Yazhpanam on வியாழன், 19 அக்டோபர், 2017 | பிற்பகல் 1:45:00

"தமிழன்” என திரையில் சொல்லி நடித்தவர்க்கு பதாதைகளை ‘கட்டவுட்’ என்றால் தமிழன் ஆள்வதற்காக உயிர் கொடுத்த உண்மை வீரர்களான மாவீரர்களுக்கு எம் மண்ணில் மூலை முடுக்கெல்லாம் சிலை வைக்கலாமே? முதலில் அதை செய்யுங்கள் தம்பிகாள்!
எமக்கு சம்பந்தப்படாத அப்துல்கலாம், காந்தி போதாது என்று இப்போ நடிகர்களும் எம் வீதிகளை ஆக்கிரமிப்பதா?
அடுத்தவர் ஏவலுக்கு துணை போகாதீர்கள். அதற்காக நடிகர்களை திட்டி அவமானபப்டுத்தும் இழிவும் தேவையில்லை.
நடிகர்களை கூத்தாடி என எழுதிவிட்டார்கள் என போர்க்கொடி தூக்குகின்றனர் சிலர்.
“கூத்தாடி” அழகு தமிழ் சொல். கூத்து பண்டை தமிழரின் உயரிய கலை. இன்று அருகி செல்கிறதோடு அது இன்று இழிவாக கருதப்படுவதும் தமிழனை இழிவாக நினைக்க செய்யும் ஒரு பார்வையே.
இன்றைய நடனம் நாடகம் எல்லாமே கூத்தில் இருந்து பிறந்த கலைகளே.
கூத்தாடி என்பது கூத்து ஆடும் கலைஞன் என்று பொருள். அது இழிந்த தொழில் அல்ல. பொருள் நாடாமல் மக்களை மகிழ்விக்கும் உயர்ந்த சேவை ஆற்றி மகிழ்ந்தவர்கள் கூத்தாடிகள்.
இன்று அது பொருளீட்டும் தொழிலாக இருப்பதில் தவறில்லை. ஆனால் கலைஞனை தலைவர்களாக பார்த்து தலை, தளபதி என மக்கள் பைத்தியமாவது மடமை மக்களின் அறியாமை.
தவறு மக்களில்.. கலைஞர்களை விட்டு விடுவோம்.
சினிமா மோகத்தை எவர் ஊட்ட முயன்றாலும் நாம் அடிமையாக மாட்டோம் என எம் தமிழ் மண்ணில் உள்ள தமிழ் இளைஞர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
நன்மையை செய்ய வேண்டும் என்றால் உங்கள் தாய் தந்தையர் பெயரில் இல்லையேல் தாயாகி நாம் வாழ உயிர் கொடுத்த மாவீரர்கள் பெயரில் தாராளமாக செய்யுங்கள்.
நடிகர்களை தூக்கி பிடித்து எம் தமிழ் மண்ணை நாசமாக்காதீர்கள்.
குரங்கு தன் புண்ணை தோண்டி தோண்டி சுகம் காண்பது போல் அடிமைகளாக இருப்பதில் சுகம் காண்பவர்கள் தமக்கான குழியை தாமே பறிக்கின்றனர்.
Image may contain: 1 person, smiling, text
தமிழுக்காக இன விடியலுக்காக போராடிய இனத்திற்காக குரல் கொடுக்க துப்பில்லாதவன் சினிமாவில் பேசிய ஒரு வசனத்தை அவன் மனதார. சொன்னதாக நம்பி பனர் கீறி வைத்து கொண்டாடும் அளவிற்கு எம். இனம் அறிவிலிகள் ஆகிவிட்டதா வீரம் விளைந்த மண்ணுக்கு இதை செய்வோர் அவமான சின்னங்களே.
0:36
Vilambaram:
loading...

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

உங்கள் கருத்துக்கள் என்ன?

Featured

Contact

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2018. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modify By TPI Distributed by Radio. | Proudly powered by Blogger