Header Ads

மைத்திரி துரத்தியடித்தார்!! அதிகரிக்கிறது சொர்னாவின் அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மைத்திரி ராஜாங்க அமைச்சராக உள்ள விஜயகலாவை புறக்கணித்துள்ளதாக தெரியவருகின்றது.
மைத்திரியின் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு ஆயத்தமான விஜயகலாவை விழாவுக்கு வரக்கூடாது என மைத்திரியின் தரப்பில் இருந்து கண்டிப்பான உத்தரவு வந்ததால் விஜயகலா மைத்திரியின் நிகழ்வுகளுக்கு செல்லவில்லை எனத் தெரியவருகின்றது.
வித்தியாவைக் கொடூரமாக் கொன்ற சுவிஸ்குமாருடனும் சுவிஸ்குமாரின் தம்பியான சசீந்திரனுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த விஜயகலா, வித்தியாவைக் கொடூரமாகக் கொன்றதாகத் தெரிவித்து பொதுமக்களால் கட்டி வைக்கப்பட்டடிருந்த சுவிஸ்குமாரை தந்திரமாக மீட்டு தப்பச் செய்தார். இச் சம்பவத்தினால் கொதிப்புற்ற மக்கள் யாழ் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்திருந்ததும் அனைவரும் அறிந்ததே. அந்த தாக்குதலால் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டதாக தெரிவித்து ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டு தற்போதும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
விஜயகலாவின் இந்தச் செயலால் தற்போதும் வடபகுதி பொதுமக்கள் கடும் ஆவேசத்துடன் இருக்கின்றார்கள். விஜயகலாவை யாழ் மேல் நீதிமன்றமும் கடுமையாக கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே விஜயகலாவை தனது நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரி கிட்டவும் நெருங்கவிடவில்லை. தற்போது விஜயகலா ’யாழ்ப்பாணத்தின் சொர்னாக்கா” என்ற நிலையிலேயே மக்களால் பார்க்கப்படுகின்றார்.
விஜயகலாவின் அடியாட்களாக உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள், மாட்டுக்கள்ளர், பொம்பிளைக்கள்ளர், காவாலிகள், தெருப்பொறுக்கிகள் போன்றவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன் போதைப்பொருள் கடத்துபவனும் மாட்டுக்கள்ளனுமாகிய விஜயகலாவின் தீவக ரவுடியாக தொழிற்படும் மண்கும்பான் பிரபு என்பவன் வேலணைப் பிரதேசசெயலாளர் உட்பட அரச அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததால் அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் அவனுக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்திருந்தனர்.
தீவகத்தில் கட்டாக்காலியாகத் திரியும் ஆடு மாடுகளை பிடித்து, போற்றத்தக்க விடயமாக மிகக் குறைந்த விலையில் பிரதேசசெயலாளர் கண் தெரியாத குடும்பத்தலைமைகளுக்கு வாழ்வாதாரத்துக்காக கொடுத்திருந்தார். அவ்வாறு அவர் குறித்த மாடுகளைக் கொடுக்க முற்பட்ட போது மண்கும்பாண் பிரபு தனது பினாமிக்கு இறைச்சிக்காக அந்த மாடுகளை குறைந்த விலையில் பெறுவதற்கு முற்பட்டான். அதற்காக விஜயகலாவையும் துணைக்கு இழுத்தான்.
நல்லுாரில் மகேஸ்வரன் மணி மண்டபத்தில் அன்னதானம் செய்து கொண்டு விஜயகலா மாட்டை இறைச்சிக்கு வாங்கும் மண்கும்பான் பிரபுக்கு துணை நின்றமை தொடர்பாக தீவக மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்.
படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்றது போல் விஜயகலாவின் கேவலம் மிக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன.
விஜயகலா தொடர்பாக உண்மைத் தகவல்களை வெளியிடுபவர்களை விஜயகலா தனது அடிவருடியாக உள்ள ஊத்தை சேது என்பவன் இயக்கும் இணையத்தளத்தில் மிகக் கேவலமாக செய்திகள் வெளியிட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவற்றை எல்லாம் பொருட்படுத்ததாது விஜயகலா தொடர்பாக தொடர்ந்து துணிச்சாலாக செய்திகள் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை நோர்வேயில் வசிக்கும் விபச்சாரப் புறோக்கரான ஊத்தை சேதுவான ந.சேதுரூபனுடன் தனக்கு தற்போது எந்தவித தொடர்பும் இல்லை என விஜயலா ஊடகவியலாளர்கள் சிலருக்குத் தெரிவித்திருந்த போதும் ஊத்தை சேதுவுடன் தொடர்பில்லை என பகிரங்கமாக வெளிப்படுத்த மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
விஜயகலாவிடம் வேலை வாய்ப்பு கேட்டு வந்த பல இளம் பெண்களும் இளம் குடும்பப் பெண்களும் ஊத்தைசேதுவால் தந்திரமாக ஏமாற்றப்பட்டு விபச்சாரத்துக்கு தள்ளப்பட்டமை தொடர்பாகவும் செய்திகள் ஆதாரங்களுடன் தெரிவிக்கின்றன 
விபச்சாரம் மற்றும் கம்பம் போன்றவற்றில் பெறப்படும் பணத்திலேயே ஊத்தை சேது தனது போதைப்பொருள் பாவனைக்குப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண சொர்னா அக்காவை மைத்திரி துரத்தியடித்தார்!! அதிகரிக்கிறது சொர்னாவின் அட்டகாசம்!!
ஊத்தை சேது விஜயகலாவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் நெருங்கி நிற்கும் காட்சி இது!!
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.