யாழில் பாடசாலையில் நடக்கும் திருகுதாளங்கள்:- பகல் கொள்ளையர்களாக மாறும் பாடசாலைகள்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Tuesday, October 24, 2017

யாழில் பாடசாலையில் நடக்கும் திருகுதாளங்கள்:- பகல் கொள்ளையர்களாக மாறும் பாடசாலைகள்!!!

யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட மத்திய வங்கி ஆளுனர் குமாரசுவாமி இந்திரஜித் ‘தென்னிலங்கையில் உள்ள நிதி நிறுவனங்கள் வட பகுதியை தங்கச் சுரங்கமாக நினைக்கின்றார்கள்‘என தெரிவித்திருந்தார்.
வடபகுதியில் உள்ளவர்களின் பொருளாதார தேட்டங்களை எப்பாடுபட்டாவதும் சுரண்டிக் கொண்டு போவதற்கு தென்னிலங்கையில் உள்ள நிதிநிறுவனங்கள் வங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதே வேளை வட பகுதியில் உள்ள பாடசாலைகளை மையமாக வைத்தும் பல்வேறு தரப்புக்கள் தமது வியாபாரா நடவடிக்கைகளை மேற் கொண்டு நிதிச் சுரண்டல்களில் ஈடுபட்டு வருகின்றன. யாழில் சில பாடாசாலைகளை மையமாக வைத்து தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்றவை மாணவர்கள் மற்றும் பெற்றோரை மையப்படுத்தி பல ஏமாற்று தந்திரங்கள் மூலம் பணத்தை கொள்ளையடிக்க முற்படுகின்றனர்.
அண்மையில் சித்திரப் போட்டி ஒன்றை மையமாக வைத்து ஒரு நிறுவனம் பெற்றோரின் தலையில் மிளகாய் அரைக்க முற்பட்டிருந்தது. பாடசாலைகளில் சித்திரப் போட்டி நடைபெற்றதாகத் தெரிவித்து குறித்த பாடசாலை ஒன்றில் நடந்த சித்திரப் போட்டியில் பங்கு பற்றிய மாணவன் பரிசு பெற்றுள்ளார். அதனை வந்து இந்த நிதி நிறுவனத்தில் வாங்குங்கள் என தெரிவித்து அந்த மாணவனின் பெற்றோரின் தொலைபேசி இலக்கத்துக்கு அந்த நிதி நிறுவனம் அறிவித்திருந்தது. தனது மகனின் கெட்டித்தனத்தை மெச்சிச்சியபடி அந்த நிதி நிறுவத்தில் பரிசு வாங்கச் சென்ற தந்தை 300 ரூபா பரிசைப் பெறுவதற்கு ஆயிரம் ரூபாவை இழந்து வந்துள்ளார். அதாவது தமது நிறுவனத்தில் மாணவன் பெயரில் காப்புறுதி வைத்தால் மாத்திரமே பரிசு பெறலாம் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. அத்துடன் அவன் படித்த பாடசாலையில் ஏராளமான மாணவர்களின் பெற்றோரும் அங்கு வந்திருந்தனர். அவர்கள் எல்லோரையும்  அவர்களது மகன் பரிசு பெற்றுள்ளான் என தெரிவித்தே அந்த நிறுவனம் அழைத்திருந்தது.
அவர்களில் அனேகமானவர்கள் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை கடுமையாக எச்சரித்து சென்றுவிட்டனர். அப்பாவிகள் பலர் காசு கட்டி பரிசு வாங்கி வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இவ்வாறான பல மோசடிகள் பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றன. யாழில் உள்ள தனியார் பாடசாலைகளில் பெருமளவுக்கு இந்த மோசடி பாடசாலையின் துணையுடன் நடந்து கொண்டிருக்கின்றது. மானிப்பாயில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையிலும் ஏராளமான மோசடிகள் பல நிறுவனங்களால் பாடசாலையில் துணையுடன் நடந்து வருகின்றன.
குறித்த பாடசாலையில் சம்பத் வங்கியில் சிறுவர்களின் பணத்தை வைப்பிலிடுவதற்காக குறித்த பாடசாலை நிர்வாகம் செய்துள்ள திருகுதாளம் இங்கு தரப்பட்டுள்ளது. பிள்ளைகளை பாடசாலையில் மரக்கறி வகைகளை காசுக்கு வாங்கிக் கொண்டுவரச் செய்து அவற்றை பெருமளவு பணம் கொடுத்து பெற்றோர் மூலமே வாங்கச் செய்து அந்தப் பணத்தை அப்படியே சம்பத் வங்கியில் இடுவதற்கான தந்திரத்தை மேற் கொண்டுள்ளது. அதற்காக கவர்ச்சிகரமாக கூடுதலாக விற்பனை செய்யும் பிள்ளைகளுக்கு பரிசு என கூறி பெற்றோர்களை மடையர்களாக மாற்றச் செய்துள்ளது குறித்த பாடசாலை.
மானிப்பாயில் உள்ள சர்வதேச பாடசாலையானது ஒட்டுமொத்தமாக பித்தலாட்டங்களின் வடிவமாக மாறியுள்ளது. குறித்த பாடசாலையில் கற்கும் மாணவர்களை நடுத்தெருவில் விரும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஒரு பாஸ்டரே குறித்த பாடசாலையின் நிர்வாகியாவார். இவருக்கு குறித்த பாடசாலையை நிர்வகிப்பதற்காக வெளிநாட்டு மத அமைப்பிடமிருந்து பெருமளவு நிதி வருகின்றது. இலங்கையில் இறக்குமதியாகும் எந்த வகையான விலைகூடிய காரையும் வாங்குவதற்கு இவரே முன்னிலையில் நிற்பவர் எனவும் இவரது நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால் இவரால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலை தற்போது பெரும் கேவலமான நிலையில் உள்ளதாக பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்த்த பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர். முறையாகக் பயிற்றப்படாத ஆசிரியர்களை வைத்தே தற்போது குறித்த பாடசாலை இயங்கி வருகின்றது. இந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்க சேரும் ஆசிரியர்களுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லையாம். அதாவது பயிற்சி ஆசிரியர் என்ற போர்வையில் அவர்களது சம்பளங்களை சுரண்டி அந்த பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டே பிள்ளைகளுக்கு கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.‘
லண்டன் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தின் ‘சிலபஸ்சே‘ குறித்த மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. இலங்கை கல்விக் கொள்கைகள் மற்றும் சிலபஸ்கள் இந்தப் பாடசாலையில் மேற்கொள்வதில்லை. குறித்த பாடசாலையில் 16 வயதுவரை கற்ற மாணவர்கள் பின்னர் இலங்கை பரீட்சைகள் எதுவுமே எடுக்க தகுதியற்றவர்களாகின்றார்கள். இவர்கள் மீண்டும் வேறு பாடசாலைகளில் சேர்ந்து கற்று இலங்கை கல்வித் திணைக்கள பரீட்சைகளை எடுக்கும் பரிதாப நிலைக்கு மாற்றப்படுகின்றார்கள்.
இவர்களால் நடாத்தப்படும் லண்டன் சிலபஸ் பாடங்களுக்கான பரீட்சைகளில் சித்தியெய்தத் தவறும் பிள்ளைகள் அதன் பின்னர் எந்தவொரு இலங்கை பரீட்சைகளையும் எடுக்க முடியாதவர்களாக மாறிவிடுகின்றார்கள். இதனால் இவர்களது வாழ்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.
இவ்வாறு குறித்த  பாடசாலையில் நடக்கும் தராதரமில்லாத கல்வி நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க குறித் பாடசாலையில் பயிலும் மாணவர்களின் பெற்றோரைக் குறி வைத்து பணச் சுரண்டல்களிலிலும் குறித்த பாடசாலை ஈடுபட்டு வருகி்ன்றது. பாடசாலையை வணிக நிறுவனமாக மாற்றி அங்கு கற்கும் மாணவர்களின் பெற்றோருக்கு பல வேறு தொல்லைகளை மேற் கொண்டு வருகின்றது.
பாடசாலை வளாகத்துக்குள் குசன் செற்றிகள் விற்கப்படுகின்றன. ரீவிகள் விற்கப்படுகின்றன. விற்கப்படும் அவற்றை பாசடாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோர் தவணை முறையில் பணத்தைக் கட்டலாம் என தெரிவித்து இவை பெற்றோரின் தலையில் கட்டப்படுகின்றன.
குறித்த பாடசாலை மாத்திரம் இவ்வாறான பணச்சுருட்டல்களைச் செய்யவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்களும் இவ்வாறான செயற்பாட்டையே மேற் கொண்டு வருகின்றன. வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அதிகாரிகள் மற்றும் வடக்கு கல்வியில் அக்கறை உள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்.
நாம் இங்கு வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாக ஏதாவர் ஒரு பாடசாலை தங்களையே குறிப்பிட்டதாகக் கருதினால் அவர்கள் எமக்கு தமது விளக்கத்தை நியாயப்படுத்தி எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் நாம் அவற்றை பிரசுரிப்போம். எமது மின்னஞ்சல் முகவரி [email protected]


No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)