உலகிலேயே பெரிய வாழைமரங்கள் மற்றும் வாழைப்பழங்கள்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Thursday, November 16, 2017

உலகிலேயே பெரிய வாழைமரங்கள் மற்றும் வாழைப்பழங்கள்!!!

பாப்புவா நியூ கினி என்னும் நாட்டில் உள்ள போசவி கிரேட்டர் என்னும் அடர்ந்த மலைப்பகுதியில் மிகவும் உட்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உலகிலேயே பெரிய வாழைமரங்கள் காணப்படுகின்றன. இவை காட்டு வாழைகள் வகையைச் சார்ந்தவை.
உலகிலேயே  பெரிய  வாழைமரங்கள்  மற்றும்  வாழைப்பழங்கள் !
மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாப்புவா நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். இதில் பாப்புவா நியூ கினியா நாட்டில் காணப்படுவதுதான் பெரிய வாழை இனமாகும்.
மிகவும் அபூர்வ உயிர் இனங்கள் நிறைந்த, போசவி கிரேட்டர் என்னும் இப்பகுதி, ஆராய்சியாளர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் அருமையான இடமாகும்.
பதினைந்து மீட்டர் உயரம் கொண்ட இம்மரம்,  மேல்நோக்கி இருக்கும் இலையோடு இருபது மீட்டர் உயரம் ஆகும். வாழைமரத்தின் அடிப்பகுதி, கிட்டத்தட்ட ஒரு மீட்டர் விட்டம் உடையதாக காணப்படுகிறது.
உலகிலேயே  பெரிய  வாழைமரங்கள்  மற்றும்  வாழைப்பழங்கள் !
இந்தவகை வாழை இலைகளைத் தற்காலிகமாகத் தாங்கும் குடிசைகளுக்கு  மேற்கூரையாகப் பயன்படுத்துவார்கள்.
இந்தவகை காட்டு வாழை மரங்களை ஆங்கிலத்தில், முஸா இன்ஜென்ஸ்  (Musa ingens)  என்று அழைக்கிறார்கள்.
நம்மை சுற்றி காணக்கூடிய மற்ற வாழை வகைகளில் இருந்து மாறுபடும்  பப்புவாவின் மிகப்பெரிய வாழை மரம், வனப்பகுதியில் மட்டுமே காணப்படும். இப்போது வரை இந்த வாழை இனங்களை உற்பத்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
இந்த மரங்கள்,  பழங்களைத் தர நீண்ட காலம் பிடிக்கிறது. மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை தேவைப்படுகின்றது. அதனால் இந்த காட்டு வாழைப் பழங்கள் மிகவும் அபூர்வமாகக் கருதப்படுகின்றன.
அடர்ந்த காட்டுப்பகுதியில், பழங்களைக் கண்டுபிடிக்கவும் கடினமாக இருக்கிறது. பறவைகள் விலங்குகள் உண்டது போக மீதியே மனிதனுக்குக் கிழடக்கின்றது. 
உலகிலேயே  பெரிய  வாழைமரங்கள்  மற்றும்  வாழைப்பழங்கள் !
ஆகவே இந்த உலகிலேயே மிகப்பெரிய பழங்களைத் தரும், உலகிலேயே பெரிய வாழை மரமானது, வாழைப்பழ பிரியர்களுக்கு மிகவும் அபூர்வமான ஒன்றாக விளங்குகிறது .
உலகிலேயே  பெரிய  வாழைமரங்கள்  மற்றும்  வாழைப்பழங்கள் !
 இந்த விந்தையான காட்டு வாழை மட்டுமல்லாது விந்தையான தாவரங்கள், அபூர்வ விலங்குகள், விந்தையான பழங்குடியினத்தவர் கலாச்சாரம், நெஞ்சை நிறைவிக்கும் இயற்கை அழகு, என்று, சுற்றுலா பயணிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் சொர்க்கமாக,  பாப்புவா நியூ கினி நாட்டின்  போசவி கிரேட்டர்   திகழ்வது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)