மணித்தியாலத்திற்கு ஒரு முறை இசைக்கும் மணியால் மக்கள் அவதி!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, November 24, 2017

மணித்தியாலத்திற்கு ஒரு முறை இசைக்கும் மணியால் மக்கள் அவதி!!!

யாழ் குடாநாட்டு மக்களின் இயல்புவாழ்க்கை சிவில்நிர்வாகம் இயங்காமையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. வாள்வெட்டு ,போதைப்பொருள் ,அதிக மதுப்பாவனை, ரவுடிகளின் அடாவடி, அதிக வீதிவிபத்து , ஆலயங்களில்
அதிக ஒலிபெருக்கிகள் மற்றும் பாரிய ஒலிப்பெட்டிகளை அடுக்கி பக்தி என்ற பெயரில் ரீமிக்ஸ் பாடல் போட்டு மக்களை துன்ப்பப்படுத்தல் போன்ற இன்னும் பல.

அந்த வகையில் இப்போது புதிய பாதிப்பு சைவ ஆலயங்கள் சிலவற்றில் மணித்தியாலத்திற்கு ஒருதடவை ஒலிபெருக்கிகளில் சத்தமிட்டு நேரம் அறிவிக்கின்றமை. இது தானியங்கிமூலம் செயற்படுகிறது.

இரவு பகலாக ஒலிபெருக்கிகள்மூலம் இவ்வாறு இரைச்சல் எழுப்பப்படுவதால் மாணவர்கள் ஒருமனத்துடன் கல்விகற்கமுடியாதுள்ளது. அடிக்கடி அவர்களின் சிந்தனை கலைக்கப்படுகின்றது. அருகிலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகிறது. அத்துடன் நோயாளிகள் கர்ப்பிணிகள் சிறுவர்கள் போன்றோரும் வீடுகளில் ஓய்வெடுக்கமுடியாமல் திண்டாடுகிறார்கள்.

சுற்றியுள்ள ஆலயங்கள் யார் முந்திக்nhகண்டு ஒலியெழுப்புவது என்ற போட்டியினால் ஒருவரைவிட ஒருவர் நேரத்தினை முன்னதாக செயற்படுத்தி பத்து நிமிடங்களுக்கு முன்பே சில ஆலயங்களில் ஒலியெழுப்ப ஆரம்பித்து தொடரச்சியாக சுற்றாடலில் உள்ள ஆலயம்முழுவதும் ஒன்றன்பின் ஒன்றாக ஒலியெழுப்புகிறார்கள்.
கல்வியறிவு குறைந்த மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள ஆலயங்களிலேயே இவை இடம்பெறுகின்றன. புலம்பெயர் நாடுகளில் வாழுவோர் சிலரே தங்களின் பெயர் நிலைக்கவேண்டும் என்பதற்காக பொறுப்பற்றமுறையில் இவற்றை பொருத்தியிருக்கிறார்கள். சமூகப்பொறுப்புள்ளவர்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கமுற்பட்டால் அவர்கள் வாள்வெட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மணிக்கொருதடவை ஒலிபெருக்கியில் ஒலியெழுப்புவதற்கு பொலிஸார் அனுமதியளிக்கிறார்களா என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

சண்டிலிப்பாய் இரட்டைப்பிலவு வைரவர் ஆலயம் ,பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன்கோவில் ,பிரான்பற்று அம்மன்கோவில் , சங்கானை நிற்சாமம் அம்மன் கோவில் , வடலியடைப்பு பிள்ளையார் கோவில் உட்பட பலவற்றில் தற்போது இந்நோய் பரவியுள்ளது.இவை இளவாலை மற்றும் மானிப்பாய் பொலிஸ்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளாகும். நீதித்துறையாவது நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் ஏங்குகிறார்கள். 

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)