தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தினம் மிகச் சிறப்பாக நினைவுகூறப்பட்டது!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, November 29, 2017

தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தினம் மிகச் சிறப்பாக நினைவுகூறப்பட்டது!!

வடக்கு, கிழக்கு உட்பட தமிழர்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் மாவீரர் தினம் தமிழ் மக்களால் இதயபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள் போன்றவற்றில் ஏராளமான மாணவர்களும் மக்களும் கூடி மாவீரர் தின நிகழ்வுகளை இதயபூர்வமாக அனுஸ்டித்தார்கள்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.மாவீரர்களின் எழுச்சி கீதங்கள் இசைக்க, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்களுக்கான நினைவிடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை நடத்தப்பட்டுள்ளன.இதன்போது தமிழ் மக்களின் விடுதலைக்காக களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், ஊழியர்கள் எனப் பெருந்திரளானோர் மாவீரர் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.மாவீரர்கள் நினைவாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயன்தரு மரங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

யாழ் பல்கலைக்கழகத்தில்

யாழ் பல்கலைக்கழகத்தில்

கோப்பாய் மாவீரர் மயானத்தின் அருகில்

கோப்பாய் மாவீரர் மயானத்தின் அருகில்

முல்லைத்தீவு கடற்கரையில்

முல்லைத்தீவு கடற்கரையில்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாலை நேரத்தில்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாலை நேரத்தில்

27.11.2017 இன்று மாலை பி.ப 6.05 மணியளவில் தீவகம், வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்

 27.11.2017 இன்று மாலை பி.ப 6.05 மணியளவில் தீவகம், வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்

வல்வெட்டித் துறையில்

வல்வெட்டித் துறையில்

விசுவமடு, தேராவில் மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தின் முதல் வித்துடல் லெப் நெடியவனின் தாய் ஏற்றி வைத்தார்.

விசுவமடு, தேராவில் மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தின் முதல் வித்துடல் லெப் நெடியவனின் தாய் ஏற்றி வைத்தார்.

முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் – மூன்று மாவீரர்ரிகளின் தாயார் ஏற்றிவைத்தார்.

முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் – மூன்று மாவீரர்ரிகளின் தாயார் ஏற்றிவைத்தார்.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்.

களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்.

தீருவில் மாவீரர் துயிலுமில்லம்

தீருவில் மாவீரர் துயிலுமில்லம்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை 3 மாவீரர்களின் தந்தையார் ஏற்றிவைத்தார்.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை  3 மாவீரர்களின் தந்தையார் ஏற்றிவைத்தார்.

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை நான்கு மாவீரர்ரிகளின் தாயார் ஏற்றிவைத்தார்.

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை நான்கு மாவீரர்ரிகளின் தாயார் ஏற்றிவைத்தார்.

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை மேஜர் பசீலனின் தாயார் ஏற்றிவைத்தார்.

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை மேஜர் பசீலனின் தாயார் ஏற்றிவைத்தார்.

நன்றி: நியூ யாழ்ப்பாணம்

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)