போரில் மரணித்தவர்களுக்கு அனுராதபுரத்தில் பொது நினைவு தூபி! சிங்கள பேரினவாத அரசின் திசை திருப்பல்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Tuesday, November 21, 2017

போரில் மரணித்தவர்களுக்கு அனுராதபுரத்தில் பொது நினைவு தூபி! சிங்கள பேரினவாத அரசின் திசை திருப்பல்!!!

தமிழினம் தொடர்பான சகல முடிவுகளையும் எதோ ஒரு விதத்தில் தமக்கு சாதகமாக பாவிக்கவே சிங்கள ஆளும் வர்க்கம் முனைகிறது.
இதன் இன்னொரு வடிவம் தான் அனுராதபுரத்தில் அமையவிருக்கும் பொது நினைவு தூபி.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான தூபியொன்றை அமைப்பதற்கும், பொதுவான நினைவு நாளொன்றை பிரகடனப்படுத்துவதற்கும் ஈபிடிபியின் பொது செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தனது தனிநபர் பிரேரணையில் கோரியிருந்தார்.

இதன் மீதான விவாதத்தில் அரசாங்கம் சார்பில் பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன , இந்தப் பிரேரணையை ஏற்றுக் கொள்வதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. குறிப்பிட்டதொரு இனம் சார்ந்ததாக இல்லாமல் யுத்தத்தில் உயிரிழந்த சகலரும் நினைவுகூரப்பட வேண்டும்.இது அமைக்கப்பட வேண்டிய பொதுவான இடமாக அநுராதபுரம் அமைய வேண்டும் என பதிலளித்தார்.

ருவான் விஜயவர்தனவின் பதிலுக்கு நன்றி கூறி அதை ஏற்றுக்கொண்டார் டக்லஸ்.
ஆனால் இங்குள்ள கேள்வி என்னவெனில், யுத்த இழப்புகளுக்கும் அனுராதபுரத்துக்கும் என்ன சம்பந்தம்? ஏன் ருவான் அனுராதபுரத்தை தெரிவு செய்தார்? முள்ளிவாய்க்கால் ஏன் தெரிவு செய்யப்பட முடியாது?
இந்த விடயத்தை அரசு தமக்கு சாதகமாக பயன்படுத்தமுயல்கிறது. யுத்தம் அனைத்து தரப்பு மக்களையும் சரி சமனாக பாதித்தது , தமிழ் மக்கள் மட்டுமல்ல , சிங்கள மக்களும் சரி சமனான இழப்புகளை சந்தித்தனர் என்னும் விசமத்தனமான கருத்தை சர்வதேசத்திற்கு கூற முற்படுகிறது.
அதுமட்டுமல்ல , யுத்த அழிவுகளை புலிகளும் சிங்கள மக்களுக்கு ஏற்படுத்தினர் என்னும் கருத்துருவாக்கத்தின் வலிமையில் அரசு மீது சுமத்தப்பட்டுள்ள யுத்த குற்ற விசாரணைகளை கூட வலுவிழக்க செய்யமுடியும்.
இதன் ஒரு திட்டமிடப்பட்ட தெரிவு தான் பொது தூபி அமைக்க அனுராதபுரத்தின் தெரிவு.
இந்த விடயத்தில் டக்லஸ் தனது ஒப்புதலை தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏனைய தமிழ் கட்சிகள் இதில் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளன என தெரியவில்லை.
ஆனால் இந்த விடயத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டாக எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். ஒட்டு மொத்த அழிவை சந்தித்த தமிழர் பிரதேசங்களை விட அனுராதபுரத்தில் என்ன அழிவு ஏற்பட்டது என்னும் கேள்வியை அவர்கள் அரசிடம் எழுப்ப வேண்டும்.
அதை விடுத்து , ருவானின் முன்மொழிவுக்கு தலையாட்டினால் எமது இனம் சந்தித்த அழிவுகளை நாமே மூடி மறைப்பது போல ஆகிவிடும்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)